2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு அதன் விடுமுறை தினத்தில் வெளியாக தற்போது 10 படங்கள் வெளியாகவுள்ளன.
2025 பொங்கல் தின விடுமுறை தினங்களாக 10 நாட்கள் இருக்கின்றன. வரும் 10-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று துவங்கி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19-ம் தேதி வரையிலும் 10 நாட்கள் தொடர்ந்து பண்டிகை கொண்டாட்டங்களும், விடுமுறையும் கிடைக்கவுள்ளது.
இதனால் ‘விடாமுயற்சி’, ‘கேம் சேஞ்சர்’, ‘வணங்கான்’ ஆகிய 3 படங்கள் மட்டுமே திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் திடீரென்று அஜீத்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தள்ளிப் போவதாகச் செய்தி வெளியானது.
உடனேயே இதற்காகவே காத்திருந்தாற்போல பல மீடியம் பட்ஜெட் படங்கள் இப்போது பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
இதில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்திருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’,
விஷால் நடித்திருக்கும் ‘மதகஜராஜா’,
சிபிராஜ் நடித்திருக்கும் ‘டென் ஹவர்ஸ்’,
சண்முகப்பாண்டியனின் ‘படைத்தலைவன்’
ஆகாஷ் முரளியின் ‘நேசிப்பாயா’,
கலையரசன் நடித்திருக்கும் ‘மெட்ராஸ்காரன்’,
ஆகிய திரைப்படங்களுடன்
புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தருணம்’, ‘2-கே லவ் ஸ்டோரி’, ‘ப்ரீடம்’, ‘சுமோ’ ஆகிய 10 படங்கள் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளன.
ஆனால் கடைசி நிமிடத்தில் திரையரங்குகள் கிடைப்பதையொட்டி சில படங்கள் தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!









