full screen background image

“ரஜினி படத்தை நான் இயக்குகிறேனா..?” – இயக்குநர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்

“ரஜினி படத்தை நான் இயக்குகிறேனா..?” – இயக்குநர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்

‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவிருப்பதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் செய்திகள் இறக்கை கட்டி பறந்து வந்தன.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தைப் பார்த்துப் பாராட்டிய ரஜினி, “எனக்கேற்ற கதை இருக்கா..?” என்று அவரிடம் கேட்டதுதான் இந்த வதந்திக்குக் காரணம்.

தேசிங்கு பெரியசாமியும் சூப்பர் ஸ்டாரே கதை கேட்டுவிட்டாரே என்பதற்காக ரஜினிக்காக ஒரு கதையை தயார் செய்து கொண்டு வந்தார். ஆனால், அதற்குள் கொரோனா லாக் டவுன், ‘அண்ணாத்த’ சூட்டிங் என்று ரஜினி படு பிஸியாகிவிட்டார்.

இந்த பிஸி அடங்குவதற்குள் தேசிங்கு பெரியசாமிக்கு கல்யாணம் ஆனது. இயக்குநர் அகத்தியனின் மகளான நிரஞ்சனாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் தேசிங்கு பெரியசாமி. இந்தக் களேபரத்தில் 2 மாதங்களாக எதையும் செய்ய முடியாமல் இருந்தவர், ரஜினியை இப்போதைக்கு தொடர்பு கொள்ளவே முடியாது என்ற யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டார்.

இதனால், தற்போது வேறொரு பெரிய நடிகருக்காக ஒரு கதையைத் தயார் செய்திருக்கிறாராம். அந்த ஹீரோவிடம் கதையையும் சொல்லிவிட்டாராம்.

ரஜினிக்கான கதை அப்படியே இருந்தாலும் முதலில் தான் இப்போது தயார் செய்திருக்கும் கதையில் படத்தை முடித்துவிட்டு அதன் பின்பு வாய்ப்பிருந்தால் ரஜினியை அணுக இருப்பதாக தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார்.

 
Our Score