காதல் காட்சிகளே இல்லாத திரைப்படம் ‘ஒற்று’

காதல் காட்சிகளே இல்லாத திரைப்படம் ‘ஒற்று’

சக்தி ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஒற்று’.

மகா மகா நுண்ணுணர்வு’ படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன் இப்படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

மேலும் இந்திரா, மகா்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர். தினேஷ், இசை – எஸ்.பி.வெங்கடேஷ், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் – மதிவாணன்.

இந்தப் படத்தின் ஸ்பெஷலே.. இதில் காதல் இல்லை.. காதல் காட்சிகளும் இல்லை. பாடல்களும் இல்லை.. ஆனால் மனதை வருடும் வித்தியாசமான கதை மட்டுமே உள்ளது.

ஒரு எழுத்தாளர் பார்வை திறன் அற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பெண்ணின் பிரச்சனையை எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார் என்பதை குடும்பப் பாங்கான திரில்லிங்குடன் சொல்கிறது இந்த ஒற்று’ திரைப்படம்.

இதன் படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் 35 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது இதன் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Our Score