full screen background image

“குழந்தை மனசோட தியேட்டருக்கு வாங்க. ரசித்துப் பார்க்கலாம்..” – இயக்குநரின் அன்பான அழைப்பு..!

“குழந்தை மனசோட தியேட்டருக்கு வாங்க. ரசித்துப் பார்க்கலாம்..” – இயக்குநரின் அன்பான அழைப்பு..!

‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் தீரஜ் வைத்தி பேசும்போது, “இந்தப் படத்துக்கு என்னோடு சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கும் மோகன் ராமகிருஷ்ணனும் நானும் மூணாம் வகுப்புல இருந்து ஒண்ணா படிச்சவங்க. வளர்ந்த அப்புறமும் எங்களுக்குள் இருந்த குழந்தை மனசை  நாங்க விடல.

அந்த உணர்வோடு ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம்னு எல்லாத்தையும் நகைச்சுவையா டீல் பண்ணி நாங்க இந்த கதையை பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம் வேறொரு ஸ்கிரிப்ட் பண்ணினோம்..  ஆனாலும் இந்த ஸ்கிரிப்ட் ஒரு நிலையில் நல்லா உருவாகி வந்தது.  

அப்புறம் குறும் படங்கள் எடுத்துட்டு இருந்த காலத்துல சித்தார்த் சார் நடிச்ச ‘எனக்குள் ஒருவன்’ படம் பார்த்தேன். அந்தப் படத்துல அவர் முகத்தை எல்லாம்  மாத்திட்டு சிரத்தையோட நடிச்சதைப் பார்த்து,  என் கதையிலேயும் அவர் நடிச்சா பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன். 

போன ஜனவரியில் அவரைப் பார்த்து கதை சொன்னேன். ‘நல்ல கதை. கண்டிப்பா பண்ணலாம். ஆனா இதை தயாரிக்கும் தைரியம் உள்ள தயாரிப்பாளரைக் கொண்டு வாங்க. நான் பண்றேன்’னு சொன்னார். நானும் தேட ஆரம்பிச்சேன். ஆனால் ரெண்டே நாள்ல சித்தார்த் ஸார் போன் பண்ணி, ‘நானே தயாரிக்கிறேன்’னு சொன்னார். அடுத்த ஒரே மாசத்தில் ஷூட்டிங் போயிட்டோம். 

படம் ரொம்ப நல்ல வந்திருக்கு. என்னதான் வளர்ந்தாலும் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு குழந்தைத் தன்மை  குணம் இருக்கும் இல்லியா..? அந்த குழந்தை குணத்தோட கதை பண்ணி இந்த படம் பண்ணி இருக்கோம். நீங்களும் ஒரு குழந்தையின் மன நிலையில் வந்தால், மனசார ரசிச்சுட்டுப் போலாம்…” என்றார். 

Our Score