full screen background image

“கஞ்சா கருப்பு.. ஒரு அடி முட்டாப் பய..” – மேடையிலேயே கண்டித்த இயக்குநர் பாலா..!

“கஞ்சா கருப்பு.. ஒரு அடி முட்டாப் பய..” – மேடையிலேயே கண்டித்த இயக்குநர் பாலா..!

இயக்குநர் சமுத்திரக்கனி நடித்து இயக்கியிருக்கும் ‘தொண்டன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் தலைமை வகித்து இசையை வெளியிட்ட இயக்குநர் பாலா படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேரையும் மனதார வாழ்த்தினார்.

அவர் பேசும்போது, “பொதுவாக எல்லாரும் சொல்ற மாதிரி, ‘இந்தப் படத்தோட டிரெயிலர் நல்லாயிருக்கு. பாடல்கள் நல்லாயிருக்கு. கண்டிப்பா படம் ஓடிரும்’ன்னு சொல்லிட்டுப் போற சாதாரணமான நிகழ்ச்சியா இது எனக்கு படலை.

இந்தத் ‘தொண்டன்’ என்னோட தம்பி சமுத்திரக்கனியின் படம். இவன் வீராதிவீரன், சூராதிசூரன்னு சொல்லணும்னு அவசியம் இல்லை. எல்லாத்தையும்விட இந்த சினிமாத்துறைல நல்லவன்.. எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறவன்.. பாசமானவன்.. எல்லாருக்கும் பிடித்தமானவன்ற லிஸ்ட்ல எனக்கு இருக்குற இரண்டு பேர்ல ஒரு ஆள் சமுத்திரக்கனி.

Thondan Audio Launch Stills (46)

சமுத்திரக்கனியை நான் வாழ்த்தணும்னு அவசியமே இல்லை. நான் வாழ்த்தினாலும், வாழ்த்தலைன்னாலும் அவன் தொண்டன்தான். சினிமாவுக்குத் தொண்டன்தான். எக்காலத்திலும் சினிமாவுக்கு தொண்டாற்றிக் கொண்டேதான் இருப்பான்.

ஒரு படத்துல.. பெயர் சொல்ல விரும்பல.. ஒரு தப்பான கேரக்டர் பண்ணியிருந்தான். அப்போ நான் அவனைக் கூப்பிட்டு சொன்னேன். ‘உன் மேல நான் நிறைய மரியாதை வைச்சிருக்கேன். இது மாதிரி கேரக்டர் பண்ணாத’ என்றேன். ‘சரிண்ணே.. இனிமேல் செய்ய மாட்டேன்’னு சொன்னான்.

படத்தில் நடித்தவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கஞ்சா கருப்பு.. தேவையில்லாமல் படம் தயாரிச்சு இருந்த காசையெல்லாம் விட்டுட்டான்.. அடி முட்டாப் பய.. உனக்கெல்லாம் தயாரிப்பை பத்தி என்ன தெரியும்..? இருந்த காசையெல்லாம் விட்டுட்டியா..? இப்போ இந்தப் படத்துல கிடைக்குற காசை வைச்சாவது பொழச்சுக்க. அதைத்தான் உனக்கு சொல்ல முடியும்..!

படத்தில் நடிச்ச அர்த்தனா, சுனைனா ரெண்டு பேரும் தமிழ் பேச முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க. நல்லா வருவீங்க.

விக்ராந்த் இந்தப் படத்துல நல்ல கேரக்டர் பண்ணியிருக்கான். மேடைல ஒவ்வொருத்தர் பேசும்போதும் அவங்களையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கான். பந்து எவ்வளவு ஸ்பீட்ல வருது..? எந்த திசைல வருது..? இதை சிக்ஸருக்குத் தூக்கலாமா..? பவுண்டரிக்கு அடிக்கலாமான்னு ஒரு பேட்ஸ்மேன் கண்ணுல தெரியற வெறி, இவன் கண்ணுல தெரியுது.

இவன முதல்ல பார்க்கும்போது ‘வாப்பா சேது உக்காரு’ன்னுதான் சொன்னேன். அப்போ ‘நான் சேது இல்ல ஸார். விக்ராந்த்’ன்னு சொன்னாப்புல. எனக்கு என்னன்னா சுசீந்திரன் டைரக்சன்ல ஒரு படத்துல சேது என்ற கேரக்டர்ல நடிச்சிருந்தான் இந்தப் பையன். அந்தக் கேரக்டர்தான் இப்பவும் என் மனசுல நிக்குது. அதான் அந்தப் பேர் அப்பவும் ஞாபகத்துல வந்துச்சு.

இந்தப் பையனும் பெரிய ஆளா வந்திருக்கணும். கொஞ்சம் தாமதமாயிருச்சு. இப்ப ஒண்ணும் மோசமில்லை. வயசு கம்மிதான். இன்னும் இரண்டு வருஷத்துக்குள்ள இந்தப் பையன் தமிழ்ச் சினிமால பெரிய ஸ்டாரா வந்து நிப்பான். நான் செய்யலைன்னாலும், வேறு யார் செய்யலான்னாலும் அது தானா வந்து அமையும். என்கிட்ட திறமையிருக்குன்னு தேடிப் போறதுன்னு ஒரு கேட்டகிரி இருக்கு. சில வாய்ப்புகள் திறமைசாலிகளை தேடி தானா வரும். இவன் அப்படிப்பட்ட திறமைசாலி. கண்டிப்பா இவனுக்கு வாய்ப்புகள் தேடி வரும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார்.

Our Score