நடிகர் ஜீவாவின் முத்தக் காட்சியில் மயங்கிய இயக்குநர் கே.பாக்யராஜ்..!

நடிகர் ஜீவாவின் முத்தக் காட்சியில் மயங்கிய இயக்குநர் கே.பாக்யராஜ்..!

‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் அறிமுக விழா சமீபத்தில் M.I.T கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஜீவாவும் அவருக்கு ஜோடியாக  சங்கீதா பட்டும்  நடித்திருக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், கு.ஞானசம்பந்தன், வையாபுரி, சாம்ஸ், நாத், ஆகியோரும் நடிக்கிறார்கள். சுவாதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ரங்கா இயக்கியிருக்கிறார்.

530a1191

இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் இரண்டுமே சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தில் வரும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ எனும் தலைப்பு பாடலை இயக்குநர் கே.பாக்யராஜ்,  அவர்கள் வெளியிட  நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன் பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், படத்தை தான் மிகவும் ரசித்து பார்த்ததாக குறிப்பிட்டார். குறிப்பாக  படத்தில்  ஜீவாவின் லிப் லாக் காட்சியை மிகவும் சிலாகித்து பேசியபோது அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது. ஜீவா மற்றும் பட குழுவினருக்கு இந்தப் படத்தின் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்.