‘தில்லுக்கு துட்டு’ – இரண்டாம் பாகம் உருவாகிறது…!

‘தில்லுக்கு துட்டு’ – இரண்டாம் பாகம் உருவாகிறது…!

Hand Made Films தயாரிப்பில், சந்தானம்  நடிப்பில், சென்ற ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இதிலும் சந்தானமே ஹீரோவாக நடிக்கவுள்ளார். தீப்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது. இந்த விழாவில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.