full screen background image

ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடித்த ‘செயல்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடித்த ‘செயல்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

C.R. கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரித்திருக்கும் முதல் படம்  ‘செயல்.’

இந்தப் படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், ‘சூப்பர் குட்’ சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகியிருக்கிறார். 

ஒளிப்பதிவு – V.இளையராஜா,  இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், நடனம் – பாபா பாஸ்கர், ஜானி, கலை – ஜான் பிரிட்டோ, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பி.ரவி, தயாரிப்பு – C.R.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ரவி அப்புலு பேசும்போது, “இந்தப் படத்திற்காக நடன இயக்குநர் பாபா பாஸ்கரின் நடன அமைப்பில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் ஆடிப் பாடும் ‘நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா’ என்ற பாடல் காட்சி கேரளாவில் சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மிகுந்த சிரமத்திற்கிடையில் படமாக்கினோம். இதேபோல் ‘டே மாமா விட்டுத் தள்ளு..  இதுக்கேண்டா இவ்வளவு டல்லு’ என்ற பாடல் காட்சியும், பாபா பாஸ்கரின் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கொடுத்து படத்தை பெரிதும் பாராட்டினார்கள். படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார்.

Our Score