இயக்குநர் விஜய்யை பாடாய் படுத்திய நடிகை தமன்னா..!

இயக்குநர் விஜய்யை பாடாய் படுத்திய நடிகை தமன்னா..!

தற்போது தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெயர் 'தேவி'.

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரே சமயத்தில்  தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி  மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தேவி’.

dcim-55

'பிரபு தேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபு தேவா மற்றும் டாக்டர் கே.கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் 'தேவி' திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க, பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் முன்னணி கதாபாத்திரங்களிலும், நாசர், ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.  

அதுமட்டுமின்றி, திறமையான தொழில் நுட்ப கலைஞர்களான சாஜித் - வாஜித் மற்றும் விஷால் மிஷ்ரா (இசையமைப்பாளர்கள்), கோபிசுந்தர் (பின்னணி இசையமைப்பாளர்), மனுஷ் நந்தன் (ஒளிப்பதிவாளர்), ஆண்டனி (படத் தொகுப்பாளர்), நா முத்துக்குமார் (காலம் சென்ற உன்னத கவிஞர்),  மனோஹர் வர்மா (ஸ்டண்ட் மாஸ்டர்) மற்றும் பிரபு தேவா - பரேஷ் ஷிரோத்கர் (நடன இயக்குனர்கள்) ஆகியோர் இந்தப் படத்தில் பணியாற்றியிருப்பது மேலும் சிறப்பு.    

2016-ம் ஆண்டின் சிறந்த திரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் உருவெடுத்து இருக்கும் ‘தேவி’ படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்றது.

dcim-51

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் தேவி படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே.கணேஷ், இயக்குநர் விஜய், பிரபு தேவா, தமன்னா, சோனு சூட், ஆர் ஜே பாலாஜி மற்றும் அஸ்வின் (பிரபு தேவா ஸ்டுடியோஸ்) ஆகியோர் பங்கேற்றார்கள். 

dcim-2

முதலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் டாக்டர் கே.கணேஷ், "இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக மும்மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் எங்களின் ‘தேவி’ திரைப்படம்  அறுபது  நாட்களில் படமாக்கப்பட்டிக்கிறது. இதற்கு முழு காரணம் இயக்குநர் விஜய்தான். ஒரே நாளில் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் எங்கள் ‘தேவி’ திரைப்படத்தை வெளியிடுவது பெருமையாக இருக்கிறது...." என்று உற்சாகத்துடன் கூறினார்.

dcim-61 

"மற்ற எல்லா திகில் திரைப்படங்களிலும் இருந்தும் எங்களின் இந்த ‘தேவி’ திரைப்படம் முற்றிலும் தனித்து விளங்கும். சில வருடங்களுக்கு முன்புவரை ரசிகர்கள் சிறந்த குடும்ப திரைப்படங்களை காண அதிக ஆர்வம் காட்டி வந்தனர், ஆனால் தற்போது பேய் படங்களை குடும்பத்தோடு சென்று காண்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த வகையில், இயக்குநர் விஜய் அவர்களின் அற்புதமான படைப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘தேவி’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவீதம் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று  நம்புகிறேன்..." என்று கூறுகிறார் ஆர்.ஜே.பாலாஜி. 

dcim-3 

"பள்ளிக்கு சென்ற  தங்களின் முதல் நாள் அனுபவத்தை யாராலும் என்றுமே மறக்க முடியாது. என்னை பொறுத்தவரை, தமிழ் சினிமாதான் என்னுடைய பள்ளிக்கூடத்தின் முதல் நாள். என்றுமே என் மனதோடு ஒட்டி இருக்கிறது. இதுவரை ரசிகர்கள் என்னை ஒரு சராசரி வில்லனாகத்தான் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இந்த ‘தேவி’ படத்தின் மூலம் என்னை ஒரு ஸ்டைலான வில்லனாக ரசிகர்கள் பார்க்க போகிறார்கள்..." என்றார் வில்லன் நடிகரான சோனு சூட். 

dcim-29

"தேவி’ திரைப்படத்தின் கதையை என்னிடம் விஜய் சார் சொல்ல ஆரம்பித்த 15-வது நிமிடம், நான் ‘தேவி’யாகவே மாறி விட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதைக் களம் வலுவானதாக இருந்தது. ஒரு அற்புதமான படைப்பாளி விஜய் என்பதை தாண்டி அவரை ஒரு உன்னதமான மனிதராகத்தான் நான் பார்க்கிறேன்...' என்றார் தமன்னா. 

dcim-15

நடிகர் பிரபு தேவா பேசும்போது, "ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படங்களாக வழங்குவதே எங்கள் 'பிரபு தேவா ஸ்டுடியோஸின்' முக்கிய பொறுப்பு. அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்திருப்பதுதான் இந்த ‘தேவி’ திரைப்படம்.

அதனை தொடர்ந்து பிரியதர்ஷன் சாரின் 'சில சமயங்களில்', ஜெயம் ரவியின் 'போகன்' மற்றும் 'விநோதன்' ஆகிய சிறந்த படங்கள் அநத வரிசையில் இணைய தயாராகி வருகிறது. ஜெயம் ரவிக்கு அடுத்த ‘தனி ஒருவன்’ திரைப்படமாக ‘போகன்’ இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் ஒரு தடவை விமானத்தில் பயணித்தபோது சீட்டில் அமரப் போகும்போது ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்னைப் பார்த்து 'ஹாய்' என்றார். உடனேயே நான் என் பின்னால் வந்த என் நண்புனிடம் 'பார்றா.. ஒரு வெள்ளைக்கார பொண்ணுக்கே என்னைத் தெரியுது' என்றேன். அவன் தலையில் அடித்துக் கொண்டு 'டேய்.. அது நம்ம தமன்னாடா' என்றான்.

அந்தளவுக்கு வெள்ளைக்காரத்தனத்துடன் இருக்கும் தமன்னா இந்தப் படத்தில் ‘தேவி’யாக அப்படியே உருமாறியிருக்கிறார். ஆனால் என்ன்ன்னா நிறைய கேள்வி கேட்கும். ஒரு சீன் சொன்னா.. அதென்ன..? இதென்ன..? ஏன் சொல்லணும்..? எதுக்கு சொல்லணும்ன்னு ஆயிரத்தெட்டு கேள்விகள்.. பாவம் இயக்குநர் விஜய்.. தமன்னாவுக்கு விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சு போயிட்டார். அந்த அளவுக்கு அவரைப் பாடாய் படுத்திருச்சு.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகளை மட்டும் 15 நாட்கள் ஷூட் செஞ்சோம். முதல் நாள் ஷூட் முடிஞ்சு போகும்போது நல்லாத்தான் இருந்துச்சு. மறுநாள் காலைல வந்து பார்த்தால் ஆளையே காணோம். நானே தமன்னாவுக்கு போன் செஞ்சு 'என்னம்மா?' என்றேன். 'ஸார்.. இன்னிக்கு விட்ருங்க ஸார்.. நான் வர முடியாது. உடம்பெல்லாம் வலி ஸார்'ன்னு சொல்லி எஸ்கேப்பாயிருச்சு. ஆனால் அடுத்த நாள் பிரெஷ்ஷா வந்து ஆடிக் கொடுத்தாங்க..." என்றார் பிரபு தேவா. 

dcim-8

"என்னுடைய எல்லா திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் கவிஞர் நா.முத்துக்குமாரின் பங்களிப்பு கட்டாயமாக இருக்கும். ஆனால் என்னுடைய சிறந்த நண்பரான அவர் தற்போது இல்லாததை நினைத்து வருந்துகிறேன். அவருடைய ஆசீர்வாதம் எங்கிருந்தாலும் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது. 

‘தேவி’ திரைப்படத்தில் எனக்கு பக்கபலமாய் இருந்த தயாரிப்பாளர் கணேஷ் அங்கிள், பிரபு தேவா சார், தமன்னா, சோனு சூட், நாசர் சார்,  ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

பிரபு தேவா சார் பற்றியும் தமன்னா பற்றியும் நான் ஒன்று சொல்லியே ஆக வேண்டும். நம் தமிழ் திரையுலகம் பிரபு தேவா சார் மீது வைத்திருக்கும் அன்பை திருவிழாவாக கொண்டாடுகின்றனர் ஹிந்தி திரையுலகினர்.  அதேபோல் நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தமன்னா. நிச்சயமாக அவருடைய ‘தேவி’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெறும் என்று முழுமையாக நம்புகிறேன்...." என்றார் ‘தேவி’ படத்தின் இயக்குநரான விஜய்.

திரையிட்டுக் காட்டிய டிரெயிலர், 2 பாடல் காட்சிகளில் முதலில் கண்ணைக் கவர்ந்தது ஒளிப்பதிவுதான். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவில் படத்தின் கலரே மாறிப் போயிருக்கிறது. வாழ்த்துகள் மனுஷ் நந்தன்.

பாடல் காட்சிகளில் நடனம் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. 'மின்சார கனவு' படத்தில் வரும் 'மானாமதுரை' பாடலின் இடையில் வரும் வேகமான 'பீட் இசை' போல் இதிலும் ஒரு பாடலின் இடையில் 'அது' வருகிறது. அதற்கு பிரபு தேவா ஆடும் நடனம் நிச்சயம் பேசப்படும்.

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!