full screen background image

வி.ஜே.சித்து எழுதி, இயக்கி, ஹீரோவாக நடிக்கும் “டயங்கரம்” திரைப்படம்!

வி.ஜே.சித்து எழுதி, இயக்கி, ஹீரோவாக நடிக்கும் “டயங்கரம்” திரைப்படம்!
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தனது அடுத்த பெரும் முயற்சியாக விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமைப்படுகிறது.
 
*டயங்கரம்” என்கிற இந்தப் படம் விஜே சித்துவின் யூடியூப் வீடியோக்களில் பிரபலமாக பயன்படுத்திய வசனத்தை தலைப்பாக கொண்டுள்ளது. அந்த வார்த்தைக்கு இப்போது திரையில் புதிய பரிமாணத்தில் அதிரடியும் உணர்ச்சி கலந்த கலகல காலேஜ் கேம்பஸ் குரலாக உருவாகிறது. 
 
தனது துள்ளலான பேச்சுத் திறன் யூத் கனெக்ட் மற்றும் சமூக ஊடகங்களில் அசைக்க முடியாத பெர்சனாலிட்டி மூலம், விஜே சித்து தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். சினிமா இயக்குனராகவும் ஹீரோவாகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படிக்கல் ஆகும்.
 
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ் இந்த அறிவிப்பை தொடர்ந்து பேசும்போது, “பிரதீப் ரங்கநாதன், ஆர்.ஜே.பாலாஜி போன்ற அறிமுக இயக்குனர்களையும் நடிகர்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது வேல்ஸ் நிறுவனத்தின் பெருமை. அதைப் போலவே இப்போது விஜே சித்துவை அறிமுகப்படுத்துவது உற்சாகத்தை தருகிறது. இன்றைய இளைஞர்களின் குரலாகவும் நேர்மையான அழுத்தமான என்டர்டெய்னராகவும் அவர் திகழ்வார்…” என்றார். 
 
தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு விஜே சித்து பேசும்போது, “சினிமா எப்போதுமே எனது கனவு. எப்போது எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக அடையப் போகிறேன் என்ற நம்பிக்கையோடு வந்தேன், யூடியூப்-காக வீடியோஸ் எடுக்கிற இடத்தில் இருந்து செட்டில் ஆக்சன் சொல்ற இடத்துக்கு வந்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது. “டயங்கரம்” ஒரு படம் மட்டும் இல்லை அது என் குரல், என் கோபம், என் ஸ்டைல், என் வாழ்க்கை, உங்களோட அதை நான் பகிர்ந்து கொள்வது ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்றார்.
 
இந்த படம் தற்போது பிரி ப்ரொடக்ஷனில் உள்ளதாகவும் தற்போதைய நிலையில் மிக விரைவில் சூட்டிங் துவங்கவிருக்கிறது என்றும் வேல்ஸ் நிறுவனம் இதை ஒரு முழுமையான தியேட்டருக்கான என்டர்டைனராக உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இசையமைப்பாளர் மற்றும் ரிலீஸ் திட்டங்கள் போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
Our Score