பிரபல நடன இயக்குநரான சாண்டி மாஸ்டர் தான் பணி புரிந்த நாயகர்கள் பற்றிச் சொல்லும்போது “ரஜினி நடந்தாலே அது நடனம்தான்…” என்று சிலிர்ப்புடன் சொல்லியிருக்கிறார்.
‘ஆஹா’ படம்தான் நான் டான்ஸ் மாஸ்டரா அறிமுகமான முதல் படம். அதுக்கப்புறம் சில படங்களில் பணியாற்றியிருந்தாலும் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்தது சிம்புவின் ‘வாலு’தான். அடுத்து வந்த ரஜினியின் ‘காலா’ என்னை வேற லெவலுக்குக் கொண்டு போயிருச்சு. பா.ரஞ்சித் அண்ணன்தான் என்னை அப்படியொரு மிகப் பெரிய இடத்துல கொண்டு போய் உட்கார வைச்சு அழகு பார்த்தாரு.
தனுஷ் ஸாரிடம் டான்ஸ் விஷயத்துல ஒரு டெடிகேஷன் இருக்கும். ‘சங்கத்தமிழன்’ல விஜய் சேதுபதி அண்ணாகூட வொர்க் பண்ணேன். விஷால் ஸார்கூட ‘சண்டைக் கோழி-2’ படம் செஞ்சேன். விஷாலும் செம டான்ஸர்தான். ஷார்ப்பா இருப்பார். இன்ட்ரஸ்ட் எடுத்து ஸ்பாட்லேயே பிராக்டீஸ் செய்வாரு.
‘ஏ ஒன்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களில் சந்தானத்துடன் வேலை செஞ்சேன். சந்தானம் ரொம்ப எனெர்ஜியான ஆளு. காட்டுத்தனமா ரிகர்சல் பண்ணுவாரு. என்ன ஸ்டெப் வைத்தாலும் ரெடியா இருப்பாரு.
ரஜினி ஸார் நடந்தாலே அது நடனம்தான். ‘காலா’ படத்தில் அவருடன் வேலை செய்யும்போது கொஞ்சம் டென்ஷனாத்தான் இருந்தது. பர்சனால பார்த்தால் ரஜினி ஸார் செம ஜாலியான டைப். டான்ஸ் விஷயத்துல சின்ன மாஸ்டர், பெரிய மாஸ்டர்ன்னு பார்க்கவே மாட்டார். டேக்குக்கு முன்பாக ரிகர்சல் கேட்பார். அதை அப்சர்வ் பண்ணி டேக்ல பிரமாதப்படுத்திருவார்..” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சாண்டி.