சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குநர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
‘தில்லுக்கு துட்டு’ படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குநர் ராம்பாலா, தற்பொழுது நடிகர் ‘கயல்’ சந்திரனுடன் இணைந்து ‘டாவு’ என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ரீபா மோனிகா ஜான், முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா, கல்யாணி நடராஜன், பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – தீபக் குமார் பதி, இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ரெமியன், விளம்பரத் தொடர்பு – தண்டோரா சந்துரு, நடனம் – அஜய், சதீஷ், சண்டை பயிற்சி – பிரபு, உடை வடிவமைப்பு – சுபிகா, ஸ்டில்ஸ் – சிற்றரசு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகம் – கே.பி.ஸ்ரீராம், தயாரிப்பு மேற்பார்வை – சுப்பு, நிறுவனம் – டூ மூவி பப்ஸ், தயாரிப்பு – பி.எஸ்.ரகுநாதன், எழுத்து, இயக்கம் – ராம்பாலா.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ராம்பாலா, ”இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போடுள்ளார்.
அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதனின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து ‘டாவு’ படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு ‘டாவு’தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதரவளித்து வரும் இளைஞர்களுக்கு பிடித்தமான தலைப்பு இது. இந்த தலைப்பை போல் இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்…” என்றார் இயக்குநர் ராம்பாலா.