full screen background image

‘கஸ்டடி’ படத்தில் அரவிந்த்சாமியின் மிரட்டல் தோற்றம் வெளியானது..!

‘கஸ்டடி’ படத்தில் அரவிந்த்சாமியின் மிரட்டல் தோற்றம் வெளியானது..!

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கி வரும் திரைப்படம் ‘கஸ்டடி.’

இந்தப் படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் – வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் – ஸ்ரீனிவாசா சித்தூரி, பேனர்- ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், வழங்குபவர் – பவன் குமார், இசை – மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு –  எஸ்.ஆர்.கதிர், படத் தொகுப்பு – வெங்கட்ராஜன், வசனம் – அபூரி ரவி, தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சிவா, மகேஷ் மேத்யூ, கலை இயக்கம் – டி.ஒய்.சத்யநாராயணா, பத்திரிகை தொடர்பு: வம்சி சேகர், சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன், மார்க்கெட்டிங் – விஷ்ணு தேஜ் புட்டா.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் பலருக்கும் பிடித்திருந்தது. மற்றும் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திர போஸ்டர் படம் குறித்தான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் அரவிந்த் சுவாமியின் போஸ்டரை படக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அரவிந்த்சாமி இந்தப் படத்தில் ராஜூ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மிகவும் வலுவான கதாபாத்திரத் தோற்றத்தில், பாரில் கை விலங்குடன் இருக்கும் இந்த போஸ்டரில் அரவிந்த் சுவாமி மிரட்டலாய் இருக்கிறார். இந்த அச்சுறுத்தும் அவருடைய தோற்றம் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அக்கினேனியின் சினிமா பயணத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் இந்த ‘கஸ்டடி’ படமும் ஒன்று.

இந்தக் ‘கஸ்டடி’ படம் வரும் மே 12-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

Our Score