S.S. ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’. இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ‘ஆரோகணம்’ ஜெய் குஹானி ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரகாஷ்ராஜ், K.V.குகன் ஆகியோரிடம் உதவியாளராய் பணிபுரிந்த S.சத்தியமூர்த்தி இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். புதுமுக இசையமைப்பாளர் சித்தார்த் மோகன் இந்த த்ரில்லர் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
வரும் மார்ச் 27-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை வைப்ரண்ட் மூவிஸ் நிறுவனத்தினர் வெளியிடுகிறார்கள்.
இப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஷரண், இப்படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
“சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ எனக்கு மிக முக்கியமான திரைப்படம். ‘இனிது இனிது’ திரைப்படத்திற்கு பிறகு நண்பர்கள் மீண்டும் இப்படத்தில் நடிக்கிறோம். விமல் மற்றும் நாராயண் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாருமே நண்பர்கள் மாதிரிதான் இருந்தோம்.
இந்த படத்தில் நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஆட துடிக்கும் ஒரு கிரிக்கெட்டர் சார்லஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் சத்தியமூர்த்திக்கு நன்றி. இந்த நொடியை வாழவேண்டும் என்று என்னும் ஒரு கதாப்பாத்திரம். ஒரு கிரிக்கெட் வீரராக இருக்க எனக்கு மிக எளிமையாக இருந்தது. அனைவரும் பிடிக்கும் ஒரு காதல் பகுதியும் இப்படத்தில் இருக்கு.
இந்தப் படத்துல நடிச்சதே ஒரு கிரிக்கெட் மேட்ச் மாதிரி பாக்குற மாதிரி சந்தோஷமாக இருந்தது. இந்த CSK படம் ரசிகர்களை T-20 மேட்ச் மாதிரி இருக்கையின் முனையில் உட்காரும் அளவுக்கு விறுவிறுப்பாக செல்லும் ஒரு த்ரில்லர் திரைப்படம்…” என்றார் ஷரண்.