full screen background image

‘கோப்ரா’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டது..!

‘கோப்ரா’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டது..!

‘கோப்ரா’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருப்பதாக அந்தப் படக் குழு அறிவித்துள்ளது.

நடிகர் விக்ரம் 12 கதாபாத்திரங்களில் நடித்து, அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் நேற்றைக்கு வெளியான படம் ‘கோப்ரா’.

இந்தப் படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் இருப்பதால் படம் மிகவும் நீளமாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதனால் படக் குழுவினர் நேற்றைக்கு உடனடியாக யோசித்து படத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்கள் அளவுக்கான காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர்.

புதிதாக வெட்டப்பட்ட காட்சிகளுக்கான அனுமதிக்காக நேற்றைக்கே சென்சார் போர்டிடம் அனுமதி கேட்டுள்ளனர். அந்த அனுமதி இன்று கிடைத்துவிடும் என்பதால் இன்று மாலை காட்சி முதல் ‘கோப்ரா’ படம் புதிய வடிவத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வரும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Our Score