ஆயிரத்தில் ஒருவன் பட வெளியீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து..!

ஆயிரத்தில் ஒருவன் பட வெளியீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து..!

வரும் மார்ச்-14, வெள்ளிக்கிழமையன்று வெளியாகவிருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தின் ஒருவன்’ படத்தின் டிஜிட்டல் பிரதி வெளியீட்டிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ‘கர்ணன்’ என்ற மாபெரும் மகாபாரதக் காவியத்தினை ‘ரெஸ்டோரேஷன்’ மற்றும் ‘டிஐ – டிடிஎஸ்’ (Restoration, DI & DTS) எனும் நவீன தொழில்நுட்பத்தினை இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படும் வகையில் செய்ததின் வாயிலாக, வெளியிட்டது திவ்யா பிலிம்ஸ்.

அது போலவே மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கும் , புரட்சித் தலைவி அவர்களும் இணைந்து நடித்த முதல் காவியமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை, ‘கர்ணன்’ படத்தையும் இன்றைய நவீன தொழில் நுட்ப வசதியுடன் இன்றைய திரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்ல திவ்யா பிலிம்ஸ் முடிவெடுத்து அதனைச் செயல்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களிடம் இதன் உரிமையை வாங்கிய திவ்யா பிலிம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு வருட காலமாக மிகவும் சேதமடைந்த ஆயிரத்தின் ஒருவன் படத்தின் ‘பிக்சர் நெகட்டிவ்’(Picture Negative) மற்றும் ‘சவுன்ட் நெகட்டிவ்’(Sound Negative)களை சீர் செய்யும் முயற்சியில் அதாவது ‘ரெஸ்டோரஷன்’(Restoration), ‘டி.ஐ., கலர் கரெக்சன்,(DI & Color Correction) ஆகியவைகளைச் செய்து முடிந்தவரையில் இன்றைய நவீன கால தரத்திற்கு ஏற்ற வகையில் சினிமாஸ்கோப்பில் வடிவமைத்துள்ளது.

அடுத்தபடியாக ‘சவுன்ட் நெகட்டிவ்’வை சரி செய்யும் முயற்சியாக ‘மோனோ சவுன்ட் சிஸ்டம்’ (Mono Sound System) ஆக இருந்த ‘சவுன்ட் நெகட்டிவ்’வை ‘வேவ் ஃபார்மேட்(Wave Format), ‘நாய்ஸ் ரெஸ்டோரேஷன்’(Noise Restoration)’ என்ற யுக்திகளை புகுத்தி ‘டி.டி.எஸ்.’ – 5. 1 தொழில் நுட்பத்திற்கு வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது நிறுவனம்.

மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களின் இனிமையான இசையினை எந்தவித மாற்றமும் இல்லாமல் இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றவகையில் பல்வேறு இசைக் கலைஞர்களின் உதவியால் அந்த தனித்தன்மை சிறிதும் குன்றாமல் மெருகேற்றி ‘டிடிஎஸ் – 5.1 சர்ரவுன்ட்’ (DTS – 5.1 Surround) என நவீன மயமாக்கி ஒலியை சிறிதும் கெடாமல் மேலும் அந்தச் சுவை குன்றாத பாடல்களை இனிமையாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் ரிலீஸாகிறது. தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் இப்படத்தினை திரையிட ஏற்பாடுகள் செய்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தலுக்கு தமது தேர்தல் பிரச்சாத்தை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் படத்தின் புதிய தொழில் நுட்ப வடிவிலான வெளியீட்டிற்கு தமது வாழ்த்துக்களை திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சொக்கலிங்கத்திற்கு அனுப்பியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தி கீழே

 Scan-140312-0001

Our Score