இன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் நடுநிலை அணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மொத்த ஓட்டுக்கள் 702
நடுநிலை அணியின் சார்பில் தலைவர் போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம் 555 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதே அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட பி.கண்ணன் 443 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதே அணியின் சார்பாக பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராம்நாத் ஷெட்டி 445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இணைச் செயலாளர்களாக போட்டியிட்ட இளவரசு 495 வாக்குகளும், பாலமுருகன் 416 வாக்குகளும், ஸ்ரீதர் 377 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
துணைத் தலைவர்களாக ராஜீவ் மேனன் 460 வாக்குகளும், ப்ரியன் 429 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்.
அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.