தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இன்று பெங்களூரில் அமைந்திருக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்காத அ.தி.மு.க. தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பல ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தினால் தமிழகம் முழுவதும் ஒரு அசாதாரணமான நிலை நிலவுகிறது. கடைகள் மூடப்பட்டன. தனியார் அலுவலகங்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதிலும் இருக்கும் சினிமா தியேட்டர்களை இன்று மாலை காட்சி மற்றும் செகண்ட் ஷோக்களை ரத்து செய்வதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வாரம் வெளியான ‘மெட்ராஸ்’, ‘ஜீவா’ இரு படங்களுமே நன்றாக இருப்பதாக மவுத் டாக் பரவி வரும்வளையில் இந்த நிலை ஏற்பட்டிருப்பதால் படங்களுக்கும் இதனால் நஷ்டம்தான். மேலும் இந்த கலவர நிலைமை நாளைக்குள் அடங்கிவிட்டால் மட்டுமே நாளை சினிமா தியேட்டர்கள் செயல்படும் என்று தெரிகிறது..!