full screen background image

சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் தலைவராக டைமண்ட் பாபு தேர்வு..!

சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் தலைவராக டைமண்ட் பாபு தேர்வு..!

இன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய பதவிக் காலம் 2 ஆண்டுகளாகும்.

புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தமுள்ள 59 வாக்களிக்கும் உரிமையுள்ள உறுப்பினர்களில், 57 பேர் தங்களது வாக்குகளை அளித்தனர்.

மதியம் 2 மணிக்கு வாக்களிப்பு முடிந்த உடனேயே, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சங்கத்தின் புதிய தலைவராக டைமண்ட் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 39 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நெல்லை சுந்தர்ராஜன் 9 வாக்குகளும், ஆதம்பாக்கம் ராமதாஸ் 9 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினர்.

டைமண்ட் பாபு 6-வது முறையாக இந்தச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுச்செயலாளர் பதவிக்கு ஜான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 37 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் செயலாளர் பெருதுளசி பழனிவேல் 20 வாக்குகள் பெற்றார்.

பொருளாளர் பதவிக்கான போட்டியில் முன்னாள் தலைவர் விஜயமுரளி 35 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் சந்திரா 22 வாக்குகள் பெற்றிருந்தார்.

pro union members

இணைச் செயலாளர் பதவிக்கு நிகில் முருகன் 33 வாக்குகள் மற்றும் யுவராஜ் 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு பி.டி.செல்வகுமார் 32 வாக்குகள் மற்றும் வி.கே.சுந்தர் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாக மேஜர்தாசன், வெட்டுவானம் சிவக்குமார், பாலன், அந்தணன், கிளாமர் சத்யா, ஆறுமுகம், சக்திவேல், என்.சரவணன், ரேகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பி.ஆர்.ஓ. சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Our Score