‘தெறி’ திரைப்படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரிந்ததே..!
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான ரோகிணி பன்னீர்செல்வம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான தாணு இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ‘தெறி’ படம் செங்கல்பட்டு ஏரியாவில் திரையிடப்படவே இல்லை.
ஆனாலும் ‘தெறி’ படம் உலகளாவிய அளவில் பெரும் வெற்றியைப் பெற்றி அதன் வசூல் 100 கோடியை தாண்டிவிட்டது.
இருந்தாலும் பிரச்சினை பெரிதானதால் ‘இனிமேல் செங்கல்பட்டு ஏரியாவில் புதிய படங்களை திரையிட மாட்டோம்’ என்று தயாரிப்பாளர் சங்கமும், ‘இனிமேல் செங்கல்பட்டு ஏரியாவில் விகிதாச்சார முறையில் மட்டுமே படங்களை வாங்குவோம்’ என்று சென்னை செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தனித்தனியே முடிவெடுக்க.. தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும், தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்ரமணியமும், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனும் இணைந்து இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க திட்டமிட்டனர்.
இதனடிப்படையில் நேற்று மாலை சென்னை தி.நகர் ஆந்திரா கிளப்பில் தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்று மூன்று தரப்பினரும் அமர்ந்து பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்படி இனிமேல் செங்கல்பட்டு ஏரியாவில் எந்தப் படமாக இருந்தாலும் அதனை விகிதாச்சார அடிப்படையிலேயே படத்தை வெளியிடுவதற்கு மூன்று தரப்பினருமே ஒத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்த மூன்று அமைப்பில் இருந்தும் உறுப்பினர்களை கொண்டு கூட்டு நடவடிக்கை குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த நடவடி்ககை குழுவின் செயல்பாட்டின்படி இனிமேல் திரைப்படங்களை விற்பனை செய்தல், விநியோகம் செய்தல், தியேட்டரில் வெளியிடுதல் நடைபெறும் என்று இப்போது அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :












