full screen background image

‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் மீது டைட்டில் உரிமை பிரச்சினை வெடித்தது..!

‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் மீது டைட்டில் உரிமை பிரச்சினை வெடித்தது..!

சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குர் விஜய்யின் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சித்திரைச் செவ்வானம்’.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் 3-ம் தேதி ஜி-5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தலைப்பை ஏற்கனவே அத்திலி சினிமா’ என்ற நிறுவனம் தனது பெயரில் 17.03.2020 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளது.

இதனால் ஜீ-5 ஓடிடி தளத்தின் சித்திரைச் செவ்வானம்’ படத்தின் அறிவிப்பை பார்த்த அத்திலி சினிமா நிறுவனம், அந்தப் படக் குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த பதிலும் வராத நிலையில், தற்போது ஜி-5’ மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களுக்கு அத்திலி சினிமா’ நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Our Score