சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..!

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..!

ஆங்கில மருத்துவத் துறையின் சீர்கேடுகளைப் பற்றிப் பேசும் ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படத்திற்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.

செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே’..!

இந்தப் படத்தில் செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை, விக்கிரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன், இசை – மஸ்தான் காதர், படத் தொகுப்பு – கே.டி.குமரேஷ், கலை இயக்கம் – ராஜூ, எழுத்து, இயக்கம் – சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

இப்படம் ஒரு தந்தைக்கும், மகளுக்கான பாசத்தோடு, தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத் துறையில் இருக்கும் மக்கள் விரோதச் செயல்களை வெளிப்படுத்தும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படம் தற்போது பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

அப்படி சென்ற இடத்தில் முதல் விருதினை இத்திரைப்படம் பெற்றுள்ளது. ட்ருக் சர்வதேச திரைப்பட விழாவில் அவுட் ஸ்டேண்டிங் அக்சீவ்மெண்ட் விருதினை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் லாக் டவுன் காலமெல்லாம் முடிந்த பின்பு விரைவில் தியேட்டர்களில் இத்திரைப்படம் வெளியாகும்.

Our Score