செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘சின்னஞ்சிறு கிளியே’..!
இந்தப் படத்தில் செந்தில்நாதன், சந்த்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை, விக்கிரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன், இசை – மஸ்தான் காதர், படத் தொகுப்பு – கே.டி.குமரேஷ், கலை இயக்கம் – ராஜூ, எழுத்து, இயக்கம் – சபரிநாதன் முத்துப்பாண்டியன்.
இப்படம் ஒரு தந்தைக்கும், மகளுக்கான பாசத்தோடு, தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத் துறையில் இருக்கும் மக்கள் விரோதச் செயல்களை வெளிப்படுத்தும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது.
தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட பணியில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.