எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை படமாக்கியிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை படமாக்கியிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’  நிறுவனம்  ‘பரியேறும் பெருமாள்’,  ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது குதிரை வால்’  என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இந்தப் படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

தொடர்ந்து இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘ரைட்டர்’ மற்றும்  ‘பொம்மை நாயகி’  ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்  அறிமுக இயக்குநரான தமிழ்  இயக்கும் சேத்துமான்’ என்னும் படமும் படப்பிடிப்பு நிறைவு பெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ், ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா, படத் தொகுப்பு – C.S.பிரேம் குமார், இசை – பிந்து மாலினி. பாடல்கள்- யுகபாரதி, பெருமாள் முருகன், முத்துவேல், கலை இயக்கம் – ஜெய்குமார், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், ஒலி வடிவமைப்பு- ஆண்டனி BJ.ருபன், கதை, வசனம் – பெருமாள் முருகன், திரைக்கதை, இயக்கம் – தமிழ், தயாரிப்பு – பா.இரஞ்சித், மக்கள் தொடர்பு – குணா.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஒரு கதையைத்தான் சேத்துமான்’ திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

தற்போது புதிய செய்தியாக கேரளாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இந்த சேத்துமான்’ திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.

இது போன்று இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே விருதுகளுக்குரிய படமாக அமைந்திருப்பது தமிழ்த் திரையுலகத்தினரை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.

Our Score