வருடா வருடம் கோலகலமாக தொடங்கி அனைத்து கார்நாடக இசை ரசிகர்களையும் கவர்ந்த லஷ்மன் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு’ தனது 11-ம் ஆண்டு இசை விழாவை இந்த மாதம் 18-ம் தேதி தொடங்கவுள்ளது.
இவ்வாண்டு நடக்கவுள்ள இந்த இசை திருவிழா பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷோபனா, பாடகிகள் நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம், ஷோபா சந்திரசேகர், மஹதி மேலும் பல்வேறு இசைக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
சென்னையில் திருவையாறு 2016 திருவிழாவை பிரபல நடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநருமான பிரபுதேவா தொடங்கி வைக்கிறார்.
மேலும் ‘சென்னையில் திருவையாறு’ இசை விழாவின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படும் ‘உணவுத் திருவிழா’வில் உலக அதிசங்களில் ஒன்றாக கருதப்படும் ஈபில் டவரை ஒற்றாற்போல் 30 அடி உயரமான முருங்கைகாய் கோபுரத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் துவக்கி வைக்கிறார்.
கூடவே, மீபத்தில் சென்னையில் பெய்த கனமழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் நிவாரண தொகைகளை கர்நாடக இசை கலைஞர்கள் நேற்று அறிவித்தனர்.
நடன கலைஞர் மற்றும் பிரபல நடிகையுமான ஷோபனா 1 லட்சமும், கர்நாடக இசை கலைஞர் கே.என்.சசிகிரன் 1 லட்சமும், கர்நாடகா சங்கம் சார்பாக 1 லட்சமும், மற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து 3 லட்சமும் வழங்கினர்.
இந்த நிவாரண தொகை ரோட்டரி சங்கம் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறினர்.









