விஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..!

விஜய் சேதுபதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்..!

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு ஒரு ட்ராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ.

தமிழில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய இவர், தற்போது தன்னுடைய ‘ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ்’ மற்றும் ‘விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கியுள்ள படம் ‘சென்னை பழனி மார்ஸ்’.

இந்தப் படத்தில் பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர்.

இவர்களுடன் மதன்குமார், தக்சிணா மூர்த்தி, ஏ.ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஜய் சேதுபதியை வைத்து ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க,  தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி. நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார். 

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை  நோக்கிய கனவும்  நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப் பார்த்து விட்டிருக்கலாம்.  சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். 

அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம்தான் இந்த ‘சென்னை பழனி மார்ஸ்’ திரைப்படம்.

மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையை திரையில் ஜாலியாகக் கண்டு களிக்க வருகிறது ‘சென்னை பழனி மார்ஸ்’.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Our Score