full screen background image

‘ஐ’ படத்திற்கெதிரான தடையுத்தரவு நீக்கம்…!

‘ஐ’ படத்திற்கெதிரான தடையுத்தரவு நீக்கம்…!

‘ஐ’ படத்திற்கு நேற்று திடீரென்று எழுந்த கோர்ட் தடையுத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பிவிபி நிறுவனத்தின் மீது சார்பு நிறுவனமான பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனம் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று சொல்லி வழக்குத் தொடுத்தது.

இதனால் ‘ஐ’ படத்திற்கு மூன்று வார காலம் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் அதற்குள்ளாக சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற சமரச மையத்தில் பேசி தீர்த்துக் கொண்டால் தடையுத்தரவு நீக்கப்படும் என்று கூறியிருந்தது.

இதனால் நேற்று இரவில் இருந்தே பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இன்று காலை ஆஸ்கர் பிலிம்ஸ் தாங்கள் கட்ட வேண்டிய 17 கோடியே 40 ல்டசம் ரூபாயை சம்பந்தப்பட்ட பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்திவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை இன்று முறைப்படி நீதிமன்றத்திற்குத் தெரிவித்த பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் ‘ஐ’ படத்திற்கு எதிரான தடையுத்தரவை நீக்கும்படியும் வழக்கை முடித்துவைக்கும்படியும் கேட்டுக் கொண்டது.

அதன்படி ‘ஐ’ படத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கி வழக்கை முடித்து வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

அப்பாடா.. என்று மூச்சு விட்டிருக்கிறார்கள் அடுத்தடுத்த வாரங்களில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிருந்த படங்களின் தயாரிப்பாளர்கள்..!

Our Score