4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..!

4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..!

ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திவிட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாவதாக இருந்தது. இந்த நிலையில் “சக்ரா’ திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தயாரிப்பாளர் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில், “விஷால் நடித்த ’ஆக்சன்’ படத்தால் தனக்கு 8 கோடிக்கும் மேல் நஷ்டம் என்றும், அந்த பணத்தை திருப்பித் தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும், ஆனால் விஷால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், அந்தப் பணத்தை விஷால் தனக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்..” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதை அக்டோபர் 30-ம் தேதிவரை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால், 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தைத் தந்துவிட்டு சக்ரா’ படத்தினை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று சொல்லி வழக்கினை முடித்து வைத்துள்ளது.

Our Score