‘கேப்மாரி என்கிற C.M.’ படத்துக்காக பிரம்மாண்டமான பாடல் காட்சி படமானது..!

‘கேப்மாரி என்கிற C.M.’ படத்துக்காக பிரம்மாண்டமான பாடல் காட்சி படமானது..!

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி வரும் அவருடைய 70-வது திரைப்படம் ‘கேப்மாரி என்கிற C.M.’  

 ‘கிரீன் சிக்னல்’  நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெய்  கதாநாயகனாக  நடிக்கிறார். இந்த ‘கேப்மாரி’ திரைப்படம்  ஜெய்  நடிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்க்கு  ஜோடியாக அதுல்யா, வைபவி ஆகியோர் நடிக்கின்றனர்.  மேலும் சத்யன், தேவதர்ஷினி, பவர் ஸ்டார் சீனிவாசன், லிவிங்ஸ்டன், சித்தார்த்  விபின் (இசை  அமைப்பாளர்) ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை - சித்தார்த் விபின், ஒளிப்பதிவு - ஜீவன்,   கலை – வீரமணி, படத் தொகுப்பு - ஜி.வி.பிரசன்னா, கதை, திரைக்கதை, வசனம்,  இயக்கம்,  தயாரிப்பு -எஸ்.ஏ.சந்திரசேகரன்.

capmaari-movie-stills-1

காதலும், கவர்ச்சியும், காமெடியும்  நிறைந்த  இந்தப்  படம்  சிறந்த  பொழுது போக்கு  படமாக  உருவாகி வருகிறது.

இந்தப் படத்திற்காக சமீபத்தில் ஒரு அதிரடியான காதல் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்தப் பாடல் காட்சிக்காக M.G.R. பிலிம் சிட்டியில் விழிகளை விரிய வைக்கும் அளவுக்கு நிறைய பொருட் செலவில் பிரம்மாண்டமான அரங்கம் வடிவமைக்கப்பட்டு அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

capmaari-movie-stills-3

“என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா..

 என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா…“

என்ற பாடகர் ஹரிசரண் பாடிய பாடலுக்காக 50-க்கும் மேற்பட்ட மும்பை அழகிகள் நடனமாடினார்கள். இந்த பாடலுக்காக நாயகன் ஜெய் மிகுந்த சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். ‘தெறி’, ‘பேட்டை’ ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர், இந்தப் பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்துள்ளார்.

“படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும்…” என்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.