கனடாவிலிருந்து இயங்கிவரும் ‘தமி
தமிழ் மொழியில் ஆளுமைகளுக்குக் கிடைக்கும் இவ்விருது, ஆங்கில இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் ‘புக்கர்’ விருதுக்
இந்த இயல் விருதுக்கு உலகில் எந்த நாட்டில் இருந்தும் தமிழ் மொழியில் எழுதி வரும் எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு முன்பு எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், வண்ணதாசன் போன்ற எழுத்தாளர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
இதை முன்னின்று நடத்தும் முக்கிய இயக்குநர்களில் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2020, 2021 ஆகிய வருடங்களில், கொரானா நோய்த் தொற்று காரணமாக இந்த விருது வழங்கும் நிகழ்வு இணைய நிகழ்வாக நடந்தது. 2022-ம் ஆண்டிற்கான விருதுகள் அண்மையில் நேரில் வழங்கப்பட்டன.
தமிழ் இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக இயல் விருது பெறும் எழுத்தாளர் பாவண்ணன், அவரது மனைவி அமுதாவுடன் வந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.
புனைவு அல்லாத அபுனைவு வகையில் ‘மூவந்தியில் சூலுறும் மர்மம்’ எனும் கட்டுரைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் சாம்ராஜ் விருது பெற்றார்.
‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற தொகுப்பு நூலுக்காக இந்திய இலக்கிய தரிசன விருதினை எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் நேரில் வந்திருந்து கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வு மிகச் சரியாக ஆறு மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுத் தொடங்கப்பட்டது. முதலில் ஒவ்வொரு விருது பெறுபவரைப் பற்
விழாக் குழுவினர், கனடாவில் தமி
இந்த வருடம், அபுனைவுகளுக்காக விருது பெற்ற எழுத்தாளர் சாம்ராஜ் தனது ஏற்புரையில், “ஒவ்வொருவருக்கும் கனடாவிற்கு வர இரு கனவுகள் இருக்கும். ஒன்று நயாகரா நீர் வீழ்ச்சியை பார்க்க… இன்னொன்று தமிழ் இலக்கிய விருதினைப் பெறுவதற்கு..” என்றவர், தனக்கு இரு கனவுகளும் ஒரே நேரத்தில் நிறைவேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வாழ்நாள் சாதனைக்காக விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன் தனது ஏற்புரையில், “துன்பத்தை பாரமாக நினைத்து நெஞ்சில் சுமப்பதைவிட, எழுதி எழுதிக் கரை
‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற தொகுப்பு நூலுக்காக சிவசங்கரி விருது பெற்றார். அவர் பேசும்போது, “இந்த விருதைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும், பரவசமும் அடைகிறேன். எனது 16 ஆண்டு காலத் தவம் போன்ற பணிக்கு இந்த விருது எனக்கு ஒரு மிகப் பெரிய கௌரவம்.
இந்திய இலக்கியத்தைப் பற்றி உலகத்திற்கு அறிமுகம் செய்யும் வகையில் 18 மொழிகளில் 102 ஜாம்பவான்களை நான் நேர்காணல் செய்து இந்த தொகுப்பு நூல்களை உருவாக்கினேன். அதற்காக பேயாக நான் அலைந்தது, ஓய்வின்றி உழைத்ததை இன்று நினைத்தால் பெருமையாக உள்ளது.
நம் நாட்டுக்காக இலக்கியத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சியாகவே நான் இப்பணியைச் செய்தேன். அப்போது நான் என் சொந்த எழுத்தை எல்லாம் தள்ளி வைத்தேன். அதன் மூலம் வரும் வருமானங்களை ஒதுக்கி வைத்தேன். கூகுள், வாட்ஸ் அப், யூ டியூப் இல்லாத அந்தக் காலத்தில், ஒவ்வொன்றையும் தேடித் தேடிச் சேகரித்தேன்.
இதற்காக முன் தயாரிப்பு, சம்பந்தப்பட்டவர்களின் படைப்புகளை வாசிப்பது, அவர்களின் இடங்களைத் தேடிச் செல்வது, அவர்களைச் சந்திப்பது என்று பெருமளவு நேரத்தைச் செலவிட்டேன். அப்படி நான் சந்தித்த இலக்கிய ஜாம்பவான்களில் 90 சதவிகிதம் பேர் இன்று உயிருடன் இல்லை.
ஒவ்வொரு சந்திப்பின் மூலமும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவிட முடியாதது. இதற்காக நான் இந்தியாவில் குறுக்கும், நெடுக்குமாக பயணம் செய்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எனது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை நினைக்கிறேன்…” என்றார்.
இலக்கிய ஊடகத் துறை மற்றும் தன்னார்வத் தொண்டு சேவைகளைப் பாராட்டி 2022-ம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் லெட்சுமணன் முருகபூபதி, தனது எழுத்து மற்றவர்களுக்கும் சோறு போடும் என்று அவரது பெற்றோர்கள் வாழ்த்தியதாகக் கூறினார்.













