அமலா பால் நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!

அமலா பால் நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!

ஒரு படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என்னும் நிகழ்வு, திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் முதல் அம்சமாக அமைவதால், மிக முக்கியமானதாகிவிடுகிறது.

அந்த வகையில் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டும் வகையில், தயாரிப்பாளரும், நடிகையுமான அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள கடாவர்’ படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை Amala Paul Productions சார்பில் நடிகை அமலா பாலே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அமலா பால் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, ஆதித் அருண், முனிஷ்காந்த் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ரஞ்சின் ராஜ் இசையமைப்பாளராகவும், அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், ஷான் லோகேஷ் படத் தொகுப்பாளராகவும், அபிலாஷ் பிள்ளை வசனகர்த்தாவாகவும், ராகுல் கலை இயக்குநராகவும், தினேஷ் கண்ணன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்தக் ‘கடாவர்’ படத்தினை இயக்குநர் அனூப் S.பணிக்கர் இயக்கியுள்ளார்.

இப்படம் இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் (ஃபோரன்ஸிக் சர்ஜன்) விசாரணை அதிகாரியாக அழைத்து வரப்படும் கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

வித்தியாசமான இந்த வேடத்திற்காக, நடிகை அமலா பால் ஒரு வார காலம் மருத்துவமனைகளுக்குச் சென்று, அந்த துறை சார்ந்த, தேர்ந்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்றார். தன்னை முழுதுமாக தயார் செய்து கொண்டு, இப்பாத்திரத்தில் ஒரு அசலான ஃபோரன்ஸிக் சர்ஜனாக கலக்கியுள்ளார்.

இன்று நடிகை அமலா பாலிற்கு பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இந்தக் கடாவர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் இசை வெளியீடு மற்றைய நிகழ்வுகள் பற்றிய செய்திகள் விரைவில் வெளியாகவுள்ளது.

 
Our Score