full screen background image

யோகி பாபு நடித்திருக்கும் ‘பட்லர் பாலு’ நவம்பர் 8-ம் தேதி வெளியாகிறது

யோகி பாபு நடித்திருக்கும் ‘பட்லர் பாலு’ நவம்பர் 8-ம் தேதி வெளியாகிறது

தற்போது தமிழ்ச் சினிமாவில் காமெடியில் கொடி கட்டிப் பறக்கும் நடிகர் யோகி பாபு ‘தர்மபிரபு’, ‘கூர்கா’, ‘ஜாம்பி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது  ‘பட்லர் பாலு’ என்னும் படத்தில் காமெடியனாக, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இமான் அண்ணாச்சி, மயில்சாமி,  ரோபோ சங்கர், தாடி பாலாஜி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பால் லிவிங்க்ஸ்டன், இசை – கணேஷ் ராகவேந்திரா, வசனம்  – S.P.ராஜ்குமார், தயாரிப்பு நிறுவனம் –  தோழா சினி கிரியேஷன், தயாரிப்பாளர் கிருத்திகா, கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.எல்.சுதிர்

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் நடிகர் யோகி பாபு இதுவரையிலும் தான் ஏற்றிருக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.

கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரராக பிழைப்பு நடத்துகிறார் யோகி பாபு. அப்படியொரு முறை சமையல் வேலைக்காக சென்றிருக்கும்போது மணப்பெண்ணை யோகி பாபுவின் நண்பர்கள் கடத்திச் சென்று விடுகிறார்கள்.

இதனால் போலீஸ் யோகி பாபுவை கைது செய்கிறது. போலீசிடம் இருந்து யோகி பாபு எப்படி தப்பிக்கிறார்  என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் கதையில், கலகலப்பான காமெடி கலந்த திரைக்கதையில் இந்த ‘பட்லர் பாலு’ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்  சுதிர்.M.L.

எப்படி நடிகர் நாகேஷுக்கு ‘சர்வர் சுந்தரம்’ படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ, அதுபோல் யோகி பாபுவிற்கு இந்த ‘பட்லர் பாலு’ படம் அமையும் என்கிறார்கள் படக் குழுவினர்.

அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு முழ நீள காமெடி கலாட்டாவாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தை முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் வரும் நவம்பர்  8-ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

Our Score