full screen background image

‘பிக்பாஸ்’ ராஜூ நாயகனாக நடிக்கும் ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம்!

‘பிக்பாஸ்’ ராஜூ நாயகனாக நடிக்கும் ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம்!

‘பிக்பாஸ்’ ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்’.

இந்தப் படத்தை Rain Of Arrows Entertainment நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். ‘எண்ணித் துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜூவுடன், ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷிணி, சார்லி, மைக்கேல் தங்கத்துரை, வி.ஜே.பப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – Rain Of Arrows Entertainment, எழுத்து, இயக்கம் – ராகவ் மிர்தாத், இசை – நிவாஸ் K.பிரசன்னா, ஒளிப்பதிவு – பாபு குமார்.I.E., படத்தொகுப்பு – ஜான் ஆபிரகாம், கலை இயக்குநர் – ஸ்ரீசசிகுமார், பாடல்கள்: கார்த்திக்நேத்தா, உமாதேவி, மோகன்ராஜா, சரஸ்வதி மேனன், நடன இயக்கம் – பாபி, நிர்வாக தயாரிப்பு – M.J.பாரதி, பத்திரிக்கை தொடர்பு – ஜான்சன்.

இந்தப் படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.  இவர் ஏற்கனவே ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசிய விருது வென்ற ‘பாரம்’ படத்தில் திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

இறந்த கால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக் கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் இந்த ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம்.

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க, முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் உருவாக்கியுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

வரும் ஜூலை 8-ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளிவருகிறது.

Our Score