full screen background image

‘பம்பர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

‘பம்பர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இன்றைக்கு வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் நடந்து வரும் லாட்டரி தொழிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்.’

வேதா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சு.தியாகராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்துப் படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பெரடி நடித்துள்ளார்.

நாயகியாக ஷிவானி நாராயணன் நடித்திருக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார். இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன்’ எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஜி.பி.முத்து நடித்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க, கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை’, ‘எம்.ஜி.ஆர். மகன்’, ‘ஆலம்பனா’ மற்றும் ‘கடமையை செய்’ ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத் தொகுப்பினை மு.காசிவிஸ்வநாதன் செய்கிறார்.

இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள இயக்குநரான எம்.செல்வக்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த பம்பர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நடந்து முடிந்துள்ளது. 

தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி வெளியானது. வித்தியாசமான முறையில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் இன்று காலையில் இருந்தே இந்தப் போஸ்டர் டிரோல் ஆகி வருகிறது.

Our Score