நாம் ஆசை, ஆசையாய் செய்யும் காரியத்தில் ஏமாற்றம் அடைவதை ‘bulbu’ என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. காதலின் தோல்வியை அந்தக் காலத்தில் பசங்க கவிதையில் மறந்தனர்… இப்பொழுது பசங்க, ஏமாத்துன பொண்ணுங்கள கவிதையா தீட்டி, அதைப் பாட்டா பாடுறாங்க.
இதேபோல காதலியிடம் ஏமாந்து ‘bulbu’ வாங்கிய காதலன் பாடும் பாடல் ஒன்றை Kinetoscope நிறுவனத்தின் சார்பில் DR.S. செல்வமுத்து & மஞ்சுநாத் ஆகியோர் வீடியோ ஆல்பமாக தயாரித்திருக்கிறார்கள். மஸ்தான்-காதர் இசையில் ‘எங்கடி போன நீ.. ஏமாத்தி போன நீ’ என்ற ஒற்றை பாடலை அபிஷேக் – பிரசாந்த் பாடியுள்ளனர்.
பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், ‘வாகை சூடவா’ இனியா ஆகியோர் இந்தப் பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்கள். கண்கவரும் உடை அலங்காரத்தில் இனியா மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இந்த பாடலில் தோன்றுகிறார்.
இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் B. சிவராக் சங்கர். ஹரி RJ ராஜன் – கார்த்திக் முனியாண்டி ஒளிப்பதிவில், அரவிந்த் படத்தொகுப்பில் . ‘பல்பு சாங்’ என்ற இந்த ஒற்றை பாடல் வீடியோ ஆல்பத்தை எழுதி இயக்கியிருக்கிறார் AR பரத் குமார்.
‘பல்பு சாங்’ ஆல்பத்தை பல்வேறு திரை இசை பாடல்களை வெளியிடும் வரும் புகழ் பெற்ற சரிகமா நிறுவனம் வெளியிடுகிறது.
இது பற்றி சரிகமா தலைமை நிறுவன அதிகாரி ஆனந்த் கூறுகையில், “பல்பு சாங்’ துள்ளல் இசை, கண்கவர் படக் காட்சிகள் என முற்றிலும் புது கான்செப்ட். இந்த ஆல்பத்தை வெளியிடுவதில் சரிகமா நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. மேலும் இந்த ஆல்பம் பல புதிய கலைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையாய் அமையும்..” என நம்பிக்கை தெரிவித்தார்.