full screen background image

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ‘புருஸ்லீ தி பைட்டர்’

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ‘புருஸ்லீ தி பைட்டர்’

அமோக வெற்றி பெற்ற ‘செல்வந்தன்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் ‘புருஸ்லீ – 2 தி பைட்டர்.’

தெலுங்கில் ‘புருஸ்லீ தி பைட்டர்’ என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் படமே தமிழில் ‘புருஸ்லீ – 2 தி பைட்டர்’ என்ற பெயரில் உருவாகிறது. அடுத்த மாதம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.

01

இதில் ராம் சரண் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரகுல் பிரீத்தி சிங் நடித்திருக்கிறார். மற்றும் இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருக்கிறார். மற்றும் அமிதாஸ், நதியா, சம்பத், ஷாயாஜி ஷிண்டே, கீர்த்தி கர்பந்தா, ராவ் ரமேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –  மனோஜ் பரமஹம்சா, இசை   –   எஸ்.எஸ்.தமன், பாடல்கள்   –  விவேகா, சண்டை பயிற்சி    –  அனல் அரசு, எடிட்டிங்    –    எம்.ஆர்.வர்மா, இணை தயாரிப்பு   –  வெங்கட்ராவ், சத்ய சீத்தாலா, தயாரிப்பு   –  பத்ரகாளி பிரசாத்., இயக்கம் – சீனு வைட்லா.

07

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சீனு வைட்லா தெலுங்கில் மிகப் பெரிய இயக்குநர். இவரது இயக்கத்தில் வெளியான ‘டி’, ‘ரெடி’, ‘வெங்கி’, ‘கிங்’. ‘நமோ வெங்கடேஷ்’, ‘தூக்குடு’, ‘பாட்ஷா’, ‘துபாய் சீனு’ போன்ற படங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளன.

இந்த படத்திற்கு தமிழ் வசனம் எழுதி  மொழி மாற்றம் செய்யும் A.R.K.ராஜராஜா படம் பற்றி பேசும்போது, “டைட்டிலுக்கேற்ப அதிரடி ஆக்சன் அதிகமுள்ள படம் இது. ஐந்து சண்டைக் காட்சிகள், ஐந்து பாடல் காட்சிகள் என செம்ம கமர்ஷியல் ரகம். ராம்சரண் படம் என்றாலே ஆந்திர மக்களிடையே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கும். டைட்டில் வேறு ‘புருஸ்லீ’ என்று வைத்ததால் இன்னும் எதிர்பார்ப்பு கூடி உள்ளது..” என்றார்.    

தயாரிப்பாளர் பத்ரகாளி பிரசாத் கூறும்போது, “1986-ம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ஒரு படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டேன். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு ராம்சரண் நடிக்கும் ‘மகதீரா’, ‘புருஸ்லீ’ உட்பட பல படங்களை ரிலீஸ் செய்து, அடுத்த தலைமுறையுடனும் என் பயணம் தொடர்கிறது..” என்றார் பெருமையுடன்.

Our Score