full screen background image

ஐஸ்வர்யா ராஜேஷின்  நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..!

ஐஸ்வர்யா ராஜேஷின்  நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..!

ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ்  (Stone Bench Films and Passion Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் பூமிகா.’

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – ராபர்டோ ஜாஜாரா(Roberto Zazzara), இசை – ப்ரித்வி சந்திரசேகர், படத் தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின், சண்டை இயக்கம் – டான் அசோக், கலை இயக்கம் – மோகன், ஒலிக்கலவை – M.R.ராஜா கிருஷ்ணன், ஒலியமைப்பு – ஸிங்க் சினிமா, ஒலிப்பதிவு – தாமஸ் குரியன், 2-D அனிமேஷன் – மனு ஆனந்த் & ஷாஜ் அஹமத், கலரிஸ்ட் – பாலாஜி கோபால், உடை வடிவமைப்பு – ஜெயலக்‌ஷ்மி சுந்தரேசன், ஒப்பனை – வினோத் சுகுமாரன் & ராம் பாபு, விஷிவல் எபெக்ட்ஸ் – igene, விஷிவல் எபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் – தேவா சத்யா, மக்கள் தொடர்பு –  சுரேஷ் சந்திரா, ரேகா, டிசைன்ஸ் – வெங்கி, தயாரிப்பு மேலாண்மை – D.ரமேஷ் குச்சிராயர், தலைமை விநியோக தொடர்பாளர் – செந்தில் முருகன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – பவன் நரேந்திரா, துணை தயாரிப்பு – M.அசோக் நாராயணன், இணைத் தயாரிப்பு – கல் ராமன், S. சோமசேகர், கல்யாண் சுப்ரமண்யம்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ரதீந்திரன் R.பிரசாத் பேசும்போது, “இந்த பூமிகா’ திரைப்படம் ஒரு ஆழமான உணர்வுகளுடன் கூடிய திரில்லர் படமாக, பல எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக இருக்கும்.

தனிப்பட்ட வகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அசர வைக்கும் நடிப்பு எனக்கு பெரும் திருப்தியை அளித்தது. அவர் இப்படத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே, மிகுந்த உற்சாகமுடன், கடுமையான ஈடுபாட்டுடன் இப்படத்தில் பங்கேற்றார்.

நீலகிரியில் படப்படிப்பு நடைபெற்றபோது, பலவிதமான பருவ நிலை மாறுபாடுகளால் படக் குழு மொத்தமுமே கடும் இன்னல்களுக்கு உள்ளானது.  ஆனால், அப்போதும் ஐஸ்வர்யா ராஜேஷ் கடுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் ஒவ்வொரு ஷாட்டிலும் அற்புதமான நடிப்பை வழங்கினார்.

மேலும், தமிழின் திறமை மிகுந்த பல புதுமுகங்கள் இப்படத்தில்  இணைந்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர்  ராபர்டோ ஜாஜாரா(Roberto Zazzara)-வின் அட்டகாசமான ஒளிப்பதிவு படத்தை பன்மடங்கு மெருகேற்றும்படி அமைந்துள்ளது.

வெறும் விஷுவல் மேஜிக்காக மட்டுமில்லமல் கடும் பருவ நிலை மாறுபாடுகளுக்கிடையே, ஒளிபற்றாக்குறையிலும் அவரது திறமையான ஒளிப்பதிவு கண்டிப்பாக பெரிதாக பேசப்படும்.

நாங்கள் ஒட்டு மொத்தக் குழுவாக கடுமையான உழைப்பில் மிகச் சிறந்த படைப்பாக இப்படத்தை தருவோம். கண்டிப்பாக இத்தயாரிப்பு நிறுவனத்தின் தரமான படமென்னும் முத்திரையை இப்படம் பெறும்…” என்றார்.  

Our Score