full screen background image

பூலோகம் படத்தில் மயானக் கொள்ளை விழா..!

பூலோகம் படத்தில் மயானக் கொள்ளை விழா..!

தமிழகத்தின் மிக முக்கியமான பக்தி கலந்த கலாச்சார விழாவான ‘மாசான கொள்ளை’ என்று அழைக்கப்படும் ‘மயான கொள்ளை திருவிழா’ இன்று தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

DSC_0242

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில்.. கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த்தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க.. வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் ‘பூலோகம்’. இந்தப் படத்தின் சில முக்கிய காட்சிகள் மாசான கொள்ளையின் பின்னணியில் படமாக்கப்பட்டன. இதற்காக இந்த மாசான கொள்ளை விழாவை முழுமையாக காண சென்னை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக் குழுவினர் விஜயம் செய்தனர் .

DSC_0269

இந்த விழாவை கண்டுகளித்த ஜெயம் ரவி “எனக்கு இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது . இந்த மண்ணின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பதில், எனக்கு அளவிட முடியாத பெருமை . பூலோகம் போன்ற மாஸ் கதையும் , கதை களமும் என்னை மக்களிடம் மிக எளிதாக ஐக்கியமாகி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..” என்றார்.

Our Score