full screen background image

யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மை நாயகி’ பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது.

யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மை நாயகி’ பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது.

இயக்குர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் பொம்மை நாயகி’ படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார்,  அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – அதிசயராஜ், இசை – சுந்தரமூர்த்தி, படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – ஜெய ரகு, பாடல்கள் –  கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், உடைகள் – ஏகாம்பரம், பத்திரிகை தொடர்பு – குணா. அறிமுக இயக்குநரான ஷான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தந்தை, மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு எளிய குடும்பத்து தகப்பனுக்கும், மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின்  உணர்வுப்பூர்வமான கதைதான் இந்த ‘பொம்மை நாயகி’ படம்.

யோகிபாபு இந்தப் படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

வரும் பிப்ரவரி 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும்  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score