‘போகன்’ படத்தின் கதை ஆப்பிரிக்க படத்தில் இருந்து திருடப்பட்டதாம்..!

‘போகன்’ படத்தின் கதை ஆப்பிரிக்க படத்தில் இருந்து திருடப்பட்டதாம்..!

'போகன்' திரைப்படத்தின் கதை உரிமை விவகாரத்தில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இயக்குநர் அந்தோணி தாமஸ் 'போகன்' படத்தின் கதை தன்னுடையது என்றும், சில உதவி இயக்குநர்களால் அந்தக் கதை 'போகன்' இயக்குநர் லட்சுமணனின் கைகளுக்குச் சென்றுள்ளது என்றும் புகார் கூறினார். கூடவே இது பற்றி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் கூறி, அவர்கள் அது பற்றி விசாரித்து 'போகன் கதை தன்னுடையதுதான்' என்று அவர்களே தீர்ப்பு கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் லட்சுமணனோ "எழுத்தாளர் சங்கம் அப்படி எதையும் சொல்லவில்லை. கதை என்னுடையது என்றுதான் அவர்கள் சொன்னார்கள்..." என்று அவரும் தன் பங்குக்கு குழப்பினார்.

இந்தக் குழப்பத்திற்கிடையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் இன்று இது குறித்து ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் "உண்மையில் அந்தக் கதை அந்தோணி தாமஸ், லட்சுமண் இருவருடையதும் அல்ல. ஒரு ஆப்பிரிக்க திரைப்படத்தில் இருந்து திருடப்பட்ட கதை. இருவருமே அந்த ஒரே படத்திலிருந்து கதையைத் திருடி திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்..." என்று சொல்லியிருக்கிறது.

கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது. திருடிய கதைக்குத்தான் இத்தனை அக்கப்போரா..? இப்போது நடக்கும் சண்டையே யார் முதலில் திருடியது என்பதாகத்தான் உள்ளது. 

இவ்வளவையும் செய்துவிட்டு 'போகன்' படத்தின் ரிலீஸின்போது 'இந்தப் படத்தை தயவு செய்து யாரும் திருட்டு டிவிடியில் பார்க்காதீர்கள்' என்று நமக்கே அட்வைஸ் செய்வார்கள் பாருங்கள்..! 

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை இது :

writers union letter-1 writers union letter-2 writers union letter-3