full screen background image

மீண்டும் ஜெயம் ரவி, அரவிந்த்சாமியை மோத வைக்கும் ‘போகன்’ திரைப்படம் 

மீண்டும் ஜெயம் ரவி, அரவிந்த்சாமியை மோத வைக்கும் ‘போகன்’ திரைப்படம் 

பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக் களத்தில் திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது.

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான ஜெயம் ரவி, ஹன்சிகா, டைரக்டர் லஷ்மண், இமான், வி.டி.வி.கணேஷ் ஆகியோர் மீண்டும் இணையும் ‘போகன்’ படத்தை மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இதில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், வில்லனாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார். இதேபோல் அரவிந்த்சாமியும் ஹீரோ – வில்லன் என இரு வேறு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இருவருக்கும் ஒரே வேடம்தான். ஆனால் இரு, வேறு குணாதிசயங்களை வெளிக்கொணரும் வேடங்களாம்.  

நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மற்றும் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திரபிரசாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சௌந்தர்ராஜன், இசை – டி.இமான், பாடல்கள் – தாமரை, மதன் கார்க்கி, ரோகேஷ், கலை – மிலன், நடனம் – ராஜூ சுந்தரம், பிருந்தா, ஷெரீப், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், படத் தொகுப்பு – ஆண்டனி, தயாரிப்பு – டாக்டர் கே.கணேஷ், எழுத்து, இயக்கம் – லஷ்மண்.

படம் பற்றி இயக்குநர் லஷ்மண் பேசும்போது, “இது ரோமியோ ஜூலியட்’ போன்ற ஜாலியான காதல் கதை அல்ல. ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும் படம் இது. ஆனாலும் மெலிதான காமெடி படம் முழுவதும் இருக்கும். காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். தற்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..” என்றார்.

Our Score