சினிமாவின் நுணுக்கமான தொழில் நுட்பக் கல்வியை திறம்பட கற்றுக் கொடுக்கிறது ‘ப்ளூ ஓஷன் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமி (BOFTA) என்கிற புதிய திரைப்படக் கல்வி நிறுவனம்.
திரைப்படக் கலையின் வரலாறு, குறிப்புகள், சினிமாவை நோக்கும் முறைகள் தவிர மேலும் நடிப்பு கலை, திரைப்பட இயக்கம், திரைக்கதை வடிவமைத்தல், டிஜிட்டல் ஒளிப்பதிவு, டிஜிட்டல் படத் தொகுப்பு, சினிமா ஊடகவியல், திரைப்படத் தயாரிப்பு மேலாண்மை மற்றும் திரைப்பட நிகழ்ச்சி மேலாண்மை என திரைப்படத் துறையின் மிக முக்கிய தொழில் நுட்பக் கலைகள் பலவும் கற்றுக்கொள்ள செயல்முறை பாடத் திட்டங்கள் BOFTA-வில் உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் மகேந்திரன், பாக்யராஜ், பார்த்திபன், விஜய், பாண்டிராஜ், எடிட்டர் லெனின், ஒளிப்பதிவாளர் மது அம்பட் என திரைத்துறையில் சிறந்து விளங்கும் பல வல்லுனர்களிடமிருந்து மாணவர்கள் திரைப் பாடங்களைக் கற்றுக் கொள்ள BOFTA ஒரு பாலமாக அமைந்துள்ளது.
இந்தக் கல்லூரியின் முதல் கல்வி ஆண்டின் வகுப்புகள் நேற்று துவங்கின. திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் பல மாணவர்கள் நம்பிக்கையுடன் பெருமிதத்துடனும் முதல் நாள் வகுப்புகளில் பங்கேற்றனர்.
முதல் நாளன்று BOFTA-விற்கு வந்து மாணவர்களை வாழ்த்திய சிறப்பு விருந்தினர்களும், பயிற்சியாளர்களும் தங்களது ஆரம்ப காலங்களில் BOFTA போன்றதொரு நல்ல வாய்ப்பு அமையவில்லை. இப்படி ஒரு தரமான கல்வியகத்தில் பயில்வது மாணவர்களின் பாக்கியம்…” என வாழ்த்தினர்.












