full screen background image

போதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..!

போதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..!

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. 

குறும் படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். 

மேலும் ராதாரவி, சார்லி, சுவாமிநாதன், துஷாரா, ப்ராதாயினி, அஜய், மீரா மிதுன், மைம் கோபி, சுரேகா வாணி, லிஸ்ஸி ஆண்டனி, ராஜலட்சுமி, ரம்யா, ரெம்யா ஜோஸப், அர்ஜூன், ரோஷன், சரத், ஆஷிக், செந்தில் குமரன், கேசவ வேலன், மீரா பாய், ராஜேஷ், முனிஷ், சோமித்ரன், வினய், நந்தினி, சாந்தா, மாஸ்டர் டேனியல், பேபி பூஜா, பேபி அலிஷா மாலிக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே.பி. இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் படத் தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டிஜிட்டல் மீடியா – சிடிசி மீடியா பாய், நிழற் படங்கள் – எஸ்.பி.சுரேஷ், ஒப்பனை – வினோத்குமார், உடைகள் – அருண் மோகன், உடைகள் வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, கதை – கே.ஆர்.சந்துரு, எழுத்து – கதிர் நடராசன், கலை இயக்கம் – கோபி ஆனந்த், தயாரிப்பு மேற்பார்வை – சாட்டை என்.சண்முகசுந்தரம், தயாரிப்பு மேனேஜர் – சிதம்பரம், தயாரிப்பு நிர்வாகம் – சின்னமனூர்  கே.சதீஷ்குமார், நிர்வாகத் தயாரிப்பு – லினிஷ் பிரசாத், ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமாஸ், ஒலிக் கலவை – ஜி.சுரன், VFX – Pixel Shack, DI – B2H, இணை இயக்கம் – கதிர் நடராசன், நடன இயக்கம் – ஷெரிப், பாடகர் – பி.யோகி, சண்டை இயக்கம் – ரக்கர் ராம்குமார்.

படத்தின் தலைப்பே மொத்த படத்தைப் பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்குமாம்.

NN7A9383

இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் கே.ஆர்.சந்துரு, “போதை ஏறி புத்தி மாறி’ என்ற தலைப்பைக் கேட்டவுடன் ‘குடி குடியைக் கெடுக்கும்’னு அட்வைஸ் பண்ணப் போற படம்னு நினைத்தால் அது தவறு. 

சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்த ‘தடம்’ படம் மாதிரி துள்ளத் துடிக்க சீட் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தும் த்ரில்லர் வகைப் படம் இது. தலைப்புக்கான காரணத்தை கிளைமாக்ஸில் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். 

வாழ்க்கையின் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மொத்த வாழ்க்கையையும் வேறொரு பாதைக்கு திசை திருப்பும். அப்படியொரு திசை திருப்பப்பட்ட சம்பவத்தால் நிகழும் விளைவுகள்தான் இத்திரைப்படம்.

NN7A9016

போதைப் பழக்கம் நமது இளைஞர்களிடையே பலரது நம்பிக்கைகளையும், கனவுகளையும் சிதைத்து அவர்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. அப்படியொரு கதையைத்தான் இந்த ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம் பேசுகிறது.

தனது திருமணத்துக்கு முதல் நாள் ஹீரோ தனது நண்பர்கள் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார். அப்போது சிலருக்கு போதை அதிகமாகி நடக்கும் ஒரு தவறு அந்த நண்பர்களில் சிலரது வாழ்க்கையையே மாற்றுகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கதை.

தலைப்பு இப்படியிருந்தாலும் போதை சம்பந்தப்பட்ட பொருட்களின் பயன்படுத்துதல் படத்தில் இல்லை. படம் கலகலவென ஜாலியாக இருக்கும் அளவுக்குத் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தும் யாரும் மது அருந்துவது போலவோ, போதைப் பொருட்களை உட்கொள்ளுவது போலவோ காட்சிகள் இல்லை.

போதையால் ஏற்படும் தீங்குகளை மட்டுமே படத்தில் சொல்லியிருக்கிறோம். படத்தின் தலைப்புக்கான காரணம் ஒரு கவன ஈர்ப்புக்காக மட்டுமே..” என்று நீட்டமாகச் சொல்லி முடித்தார் இயக்குநர் கே.ஆர்.சந்துரு.

Our Score