“சமர்த்துப் பிள்ளையா இருந்த ‘அசால்ட்டு’ சேது, அசால்ட்டா ஒரு வேலையை செஞ்சிருக்காரே..?” என்று நினைத்து, தமிழ்த் திரையுலக இளம் வாலிபர்களும், வாலிபிகளும் ஆச்சரியப்படுகிறார்கள்.
சிறந்த துணை நடிகருக்காக தேசிய விருது பெற்ற நடிகரான நடிகர் பாபி சிம்ஹா ‘உறுமீன்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரேஷ்மி மேன்னை காதலிப்பதாகவும், வரும் வாரத்தில் திருப்பதியில் கல்யாணத்தில் நடக்கவிருப்பதாகவும் சென்ற வாரமே செய்திகள் பரவின.
உடனுக்குடன் இதனை மறுத்த பாபி சிம்ஹா “எங்களுக்குள்ள கல்யாணமெல்லாம் இல்லை..” என்று மழுப்பலாகச் சொன்னாரே தவிர, ‘காதல் இல்லை’ என்று சொல்லவே இல்லை. இதனாலேயே திரையுலக வழக்கப்படி இவர்களின் காதலுக்கு கன்பார்ம் முத்திரை குத்தின மீடியாக்கள்.
ரேஷ்மி மேனன் கேரளத்துக்காரர். பாபி சிம்ஹா ஆந்திரக்காரர். இவர்களின் காதலுக்கு ரேஷ்மியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலி வீட்டாரை சமாதானப்படுத்த தன்னுடைய நெருங்கிய நண்பரான ‘பீட்சா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை பேச்சுவார்த்தைக்கு தனது வருங்கால மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம் சிம்ஹா.
கார்த்திக்குடன் உடன் சென்ற அவரது தந்தையும் ரேஷ்மியின் குடும்பத்தினரிடம் பாபியை பற்றி நல்லவிதமாகச் சொல்லி இந்தக் காதலுக்கு ஒப்புதல் வாங்கித் தந்திருப்பதாக செய்தி.
அடுத்த மாதம் நிச்சயதார்த்தம், ஜனவரியில் திருமணம் என்று இரு வீட்டாரும் இப்போது பேசி முடிவெடுத்துவிட்டதாக பாபியின் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
காதலர்களுக்கு நமது வாழ்த்துகள்..!