நடிகர் சியான் விக்ரமின் புதிய டிவி சேனல்..!

நடிகர் சியான் விக்ரமின் புதிய டிவி சேனல்..!

தமிழகத்தில் 24 / 7 மணி நேர விட்டு உபயோக பொருட்கள் விற்கப்படும் தொலைக்காட்சி சேனல் ஒன்று புதிதாகத் துவக்கப்பட்டுள்ளது. ‘பிக் டீல் டீவி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சேனலை சினிமா பிரபலங்கள் இணைந்து இயக்குகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்சய் குமார், பிரபல தொழிலதிபரும் பாலிவுட் முன்னாள் நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் பிரபல தமிழ் நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்த்து இந்த சேனலை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

Big Deal TV Launch Event Stills (3)

இந்த ‘பிக் டீல் டீவி’யின் முதல் டீஸர் நேற்று சத்யம் தியேட்டரில் நடந்த வண்ணமயமான விழாவில் வெளியிடப்பட்டது.  இந்த சேனலை வரும் ஜூன் 18-ம் தேதி முதல் அனைத்து DTH-ச்சுகளிலும் தமிழ்கம் முழுவதும் இலவசமாக பார்க்க முடியும்.

இச்சேனலில் அன்றாட வாழ்க்கை முறை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்,  உடை, உடல் நலம் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆகியவை முதன்மையாக விற்கப்படும்.

Big Deal TV Launch Event Stills (6)

‘பிக் டீல் டிவி’ நிறுவனர் ராஜ் குந்த்ரா விழாவில் பேசுகையில், “6 மாத காலத்திற்குள் எங்களது இரண்டாவது ஹோம் ஷாப்பிங் சேனலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இம்முறை தமிழில் வரும் இந்த 24/7 மணி நேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனலான ‘பிக் டீல் டீவி’ தமிழின் பிரபல நடிகர் சியான் விக்ரமுடன் இணைந்து செயல்பட இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பிக் டீல் டிவியில் சரியான மற்றும் நம்பகத்தன்மையான பொருட்கள் மட்டுமே சிறந்த விலையில் விற்கப்படும். எங்களது தலைமை நிர்வாகி மற்றும் துணை உரிமையாளர் கௌரவ் கர்க் இச்சேனலை தென்னிந்தியாவில் சிறந்த மூறையில் செயல்படுத்துவார்…” என்றார்.

பிக் டீல் டிவியின் தலைமை நிர்வாகி மற்றும் துணை உரிமையாளரான கௌரவ் கர்க் பேசுகையில், “எங்களின் இந்த பிக் டீல் டீவியில் 999 ரூபாய் முதல் 8999-ரூபாய்வரையிலுமான சிறந்த மற்றும் நேர்த்தியான பொருட்கள் விற்கப்படும். வாடிக்கையாளர்களின் சேவையே எங்களின் முதல் குறிக்கோள், ஆகையால் எங்கள் பிக் டீல் டீவியில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் தரம் பரிசோதனை செய்யப்பட்டு அனைத்து பங்குதாரர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே விற்கப்படுகிறது..” என்றார்.

Big Deal TV Launch Event Stills (8)

விழாவில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் பேசுகையில், “இந்த பிக் டீல் டிவி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் சிற்ப்பான சலுகைகளை நேர்த்தியான பொருள்களுக்கு அளித்து வருகிறது. ஹிந்தி மார்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்று தற்போது தமிழகத்தில் தனது சேவையை துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது..” என்றார்.

Big Deal TV Launch Event Stills

பிக் டீல் டிவியின் துணை உரிமையாளரும், தமிழகத்தின் பிக் டீல் டிவியின் தூதுவருமான சியான் விக்ரம் பேசுகையில், “இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனது ஒப்புதலின் பேரில் விற்பனை செய்யப்படவுள்ள பொருள்களும் இன்னும் சில தினங்களில் இச்சேனலில் விற்கப்படும். மேலும் இச்சேனலில் வாடிக்கையாளர்களின் சேவையை அறிந்து கொண்டு மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வோம். எங்களின் பிக் டீல் டீவியில் உங்களுக்கு கிடைப்பது பெஸ்டஸ்ட் மட்டுமே” என்று உறுதிமொழி அளித்தார்.

Our Score