பிக் பாஸ்-5 நிகழ்ச்சி துவங்கி 3 நாட்கள்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாக ஒரு புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.
இந்த பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் அபிஷேக் ராஜா என்பவரை மையமாக வைத்துதான் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
அபிஷேக் ராஜா முன்னொரு காலத்தில் இதே பிக்பாஸ் நிகழ்ச்சியையும், நடிகர் கமல்ஹாசனையும் விமர்சித்து பேசிய பேச்சின் வீடியோவை நேற்று யாரோ சிலர் டிவீட்டரில் போட்டுவிட இப்போதுவரையிலும் அது டிரெண்ட்டாகி இருக்கிறது.
அந்த வீடியோவில் அபிஷேக் ராஜா பேசும்போது, “கண்ணால பார்க்குற எதையும் நம்ப முடியல.. ஏன்னா ஊருக்கே தெரியும்டா… உங்களை கேமரா வச்சு எடுத்துக்கிட்டு இருக்காங்கன்னு.. ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும் என்பதற்காக பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா..? முடியலடா என்னால.. கேட்டால் பிக் பாஸுங்கிறீங்க..?” என்று பேசியுள்ளார்.
இப்படி கமலஹாசனையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விமர்சித்துவிட்டு, அதே நிகழ்ச்சிக்கு அபிஷேக் ராஜா போட்டியாளராக சென்றிருப்பதை டிவீட்டரில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வீடியோவை கமல்ஹாசனுக்கு டேக் செய்து, “ப்ரோ இது என்னன்னு பாருங்க..?” என தெரிவித்துள்ளனர்.
மேலும், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதை கவனிக்கவில்லையா…? அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்டதை பற்றி எல்லாம் தெரியாமலா அவரைத் தேர்வு செய்தீர்கள்..?” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.