முதலில் இந்தப் பதிவை படித்துவி்ட்டு பின்பு இங்கு வந்து தொடர்ந்து படிக்கவும்.!
ஸ்டோன்பென்ச் விழாவின் இறுதியில் பேச வந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா எஸ்.ஜே.சூர்யா பேசியதையும் தொட்டுப் பேசினார்.
“இங்க சூர்யா பேசும்போது அஸிஸ்டெண்ட்டா சேரும்போது பட்ட கஷ்டத்தைச் சொன்னான். அப்போது மட்டுமில்லை. இப்பவும் அது கஷ்டம்தான். நானும் அப்படி ரொம்ப கஷ்டப்பட்டவன்தான்.. எனக்கும் அந்த அனுபவம் இருக்கு..
அப்போவெல்லாம் இதுக்காகவே நான் நிறைய பொய் பேசுவேன். அஸிஸ்டெண்ட்டா யார்கிட்டேயாவது சேரணுமேன்னு நினைச்சேன்.. இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் எனக்கு நிறைய உதவி செஞ்சார். ஒரு பெரிய டைரக்டர்கிட்ட சேரணும்னு நினைச்சேன். ‘அவர்கிட்ட சேரணும்னா நிறைய படிச்சிருக்கணும். நீயும் எம்.ஏ. படிச்சிருக்கேன்னு பொய் சொல்லிரு’ன்னு சொன்னார்.
நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டு அந்த பெரிய இயக்குநர்கிட்ட வேலை கேட்டு போனேன். ஒரு ஸ்டூடியோல டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்தார். நான் போய் நின்னவுடனேயே ‘என்ன வேணும்?’ன்னாரு. ‘உங்ககிட்ட அஸிஸ்டெண்ட்டா சேரணும்’னு சொன்னேன்.. ‘புதன்கிழமை வா’ன்னாரு.. உடனே எனக்குள்ள ஒரு கனவு. சொந்தமா பைக் வாங்கிரலாம்.. டைரக்டராகியிரலாம்னு நினைச்சேன்..
அந்த புதன்கிழமையும் நீட்டா டிரெஸ் பண்ணி, கொஞ்சம் முகத்தை அழகு பண்ணிட்டு போனேன். அங்க செட்டுக்குள்ள நுழையும்போதே அந்த டைரக்டரோட வாய்ஸ் ரொம்ப சத்தமா கேட்டுச்சு. யாரையோ சத்தமா திட்டிக்கிட்டிருந்தார். நான் கரெக்ட்டா அந்த நேரம் பார்த்து உள்ள போய் நின்னு, ‘வணக்கம் ஸார்’ண்ணேன்.. ‘என்னய்யா என்ன..?’ என்றார் கோபமாக. ‘உங்ககிட்ட அஸிஸ்டெண்ட்டா சேரணும்னு வந்திருக்கேன். நீங்கதான் இன்னிக்கு வரச் சொன்னீங்க’ண்ணேன்.. பயங்கர கோபத்துல ‘வேலையெல்லாம் கிடையாது.. வெளில போ’ன்னு சொல்லிட்டாரு. இது எல்லாருக்கும் நடக்கிறதுதான்..
இத்தனை அவமானங்களைத் தாண்டித்தான் பல இயக்குநர்கள் இங்கே ஜெயிச்சிருக்காங்க. இப்படி அவமானப்பட்ட இயக்குநர்களால்தான் நல்ல தரமான, சமூகப் பொறுப்புள்ள படங்களை எடுக்க முடியும்…” என்றார்.









