‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பற்றி இந்த வாரத்திய ‘ஆனந்தவிகடனில்’ ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேட்டியளித்திருக்கிறார்.
அவர் தனது பேட்டியில், ”தமிழ் சினிமா இண்டஸ்ட்ரில பாலசந்தர்கிட்டே நெருங்கிப் பேசுறதுக்கே எல்லோரும் பயப்படுவாங்க. ‘வாடிகன் போப்’ மாதிரி அவரை உயரத்துல உட்கார வெச்சு அண்ணாந்து பார்ப்பாங்க.
நான் அவரோட அப்படிப் பழக மாட்டேன். ‘யோவ்… நீ போப்பெல்லாம் கிடையாது. எங்க தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில் பூசாரி. அதனால உன்கிட்ட உரிமையாத்தான் பேசுவேன்’னு செல்லமா சண்டை பிடிப்பேன்.
பாலசந்தர் என்கிற ‘பா’ வரிசையில் பாலுமகேந்திரா அப்புறம் பாரதிராஜான்னு எழுதினாங்க. இப்போ மூணு ‘பா’வுல ரெண்டு ‘பா’ போயிருச்சு; ஒரு ‘பா’ மட்டும்தான் உசுரோடு இருக்கு.
பெசண்ட் நகர் மயானத்துல பாலசந்தர் உடம்பைக் கிடத்தி வெச்சிருந்தாங்க. அவர் காதுல, ‘உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதுக்காக ஆசைப்பட்டு, அவசரப்பட்டு என்னைக் கூப்பிட்டிராத.. பாலுமகேந்திரா விட்டதை, நீ செய்ய நினைச்சதை, நான் செஞ்சிட்டு வர்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு’ன்னு சொல்லிட்டு வந்தேன்..!” என்று நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார்.