full screen background image

பரத்-வாணி போஜன் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..!

பரத்-வாணி போஜன் நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..!

அறிமுக இயக்குநரான ஆர்.பி.பாலாவின் இயக்கத்தில் நடிகர் பரத் – நடிகை வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

R.P.பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான செலவில் இப்படத்தை தயாரிக்கின்றது.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத்தின் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும், விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இயக்கம் – R.P.பாலா, தயாரிப்பாளர்கள் – R.P.பாலா, கௌசல்யா பாலா, தயாரிப்பு நிறுவனம் – R.P.பிலிம்ஸ், ஒளிப்பதிவு – P.G.முத்தையா, இசை – ரான்னி ரபேல், படத் தொகுப்பு – அஜய் மனோஜ், கலை  இயக்கம் – சுரேஷ் கலம்பு, ஒலி வடிவமைப்பு – M.R.ராஜா கிருஷ்ணன், நடன இயக்கம் – பூபதி, எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – ஆண்டொ, புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் – S.சிவகுமார், லைன் புரொடுயுசர் – ஆதவ், உடைகள் வடிவமைப்பு – கஸ்தூரி இரானி, புகைப்படங்கள் – ரஞ்சித், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

லூசிபர்’, ‘மரைக்காயர்’, ‘குருப்’ உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50-வது படம் இதுவாகும்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Our Score