full screen background image

2021-ம் ஆண்டுக்கான ‘சைமா’ விருது பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்..!

2021-ம் ஆண்டுக்கான ‘சைமா’ விருது பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்..!

2021-ம் ஆண்டுக்கான சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான ‘சைமா’ விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் தமிழ் மொழிப் படங்களுக்கான விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை சிம்புவும், சிறந்த கதாநாயகனுக்கான விருதை சிவகார்த்திகேயனும் பெற்றனர். 

தமிழ்ப் படங்களுக்கான சைமா விருதுகள் விவரம் :

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது. படக் குழுவின் சார்பில் நடிகர் ஆர்யா இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

‘மாநாடு’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த கதாநாயகனுக்கான விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. நெல்சனின் ‘டாக்டர்’ படத்தில் திறம்பட நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.

அதே படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை பிரியங்கா மோகன். 

சிறந்த நடிகைக்கான சைமா விருது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது. ‘திட்டம் இரண்டு’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் அரவிந்த்சாமிக்கு வழங்கப்பட்டது. ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடித்ததற்காக அவர் இவ்விருதை பெற்றார்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலி பெற்றார். ‘கர்ணன்’ படத்தில் நடிகர் தனுஷுக்கு தங்கையாக நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த வில்லன் கதாப்பாத்திரத்துக்கான விருதை ‘மாநாடு’ படத்திற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தட்டிச் சென்றார்.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த இயக்குநருக்கான விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த காமெடி நடிகர்களுக்கான விருது ரெடின் கிங்ஸ்லி மற்றும் தீபா ஆகியோருக்கு டாக்டர்’ படத்திற்காக வழங்கப்பட்டது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு ‘Outstanding Performance of the Year’ விருது வழங்கப்பட்டது. ‘கர்ணன்’, ‘மண்டேலா’, ‘டாக்டர்’ என ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததால் அவருக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவுக்குக் கிடைத்தது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘கர்ணன்’ படத்திற்காக சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு வழங்கப்பட்டது. நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம் பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற பாடலை எழுதியதற்காக அவர் இவ்விருதை பெற்றார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான விருது தீ-க்கு வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருது கபில் கபிலனுக்கு வழங்கப்பட்டது.

Our Score